Election bannerElection banner
Published:Updated:

21 வருடங்களுக்குப் பிறகு கால்பந்து தரவரிசையில் இந்தியா சாதனை! #CongratulationsIndia

21 வருடங்களுக்குப் பிறகு கால்பந்து தரவரிசையில் இந்தியா சாதனை! #CongratulationsIndia
21 வருடங்களுக்குப் பிறகு கால்பந்து தரவரிசையில் இந்தியா சாதனை! #CongratulationsIndia

21 வருடங்களுக்குப் பிறகு கால்பந்து தரவரிசையில் இந்தியா சாதனை! #CongratulationsIndia

ஐஎஸ்எல் வருகைக்குப் பிறகு இந்தியாவில் கால்பந்து  விறுவிறுவென வளர்ந்து வருகிறது. கிரிக்கெட்டை மதம் போல பின்பற்றும் நாட்டில் இருந்து கபடி, கால்பந்து, தடகளம், பேட்மின்டன், டென்னிஸ், ஸ்குவாஷ் என பல போட்டிகளில் பல்வேறு சாதனையாளர்கள் உருவாகிவருகிறார்கள். இன்று இந்தியர்கள் மகிழும் வகையில் ஒரு செய்தி வந்திருக்கிறது. ஒவ்வொரு மாதமும் பிபா தரவரிசை வெளியிடப்படும். கால்பந்து போட்டிக்கான உலக தரவரிசைப் பட்டியலில் தற்போது நூறாவது இடம் பிடித்து அசத்தியிருக்கிறது இந்தியா. 

என்னது நூறாவது இடத்துக்கே கொண்டாட்டமா என ஆச்சர்யப்பட வேண்டாம். தொடர்ந்து படியுங்கள். கடந்த 1993-ம் ஆண்டு இந்தியா நூறாவது இடத்தைப் பிடித்தது. அதன் பின்னர் 96ல் ஒரே ஒரு மாதம் மட்டும் 94-வது இடம் பிடித்தது. அதன் பின்னர் 21 வருடம் கழித்து இப்போது தான்  இந்தியா நூறாவது இடத்தைப் பிடித்துச் சாதித்திருக்கிறது. எனவே தாராளமாக காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்.

எப்படி நடந்தது ?

கடந்த மாதம் 101-வது  இடத்தில் இருந்தது இந்திய அணி.  ஏப்ரலில் ஒரு போட்டி கூட விளையாடவில்லை. அதனால் புள்ளிகளில் எந்த மாற்றமும் கிடையாது. ஆனால் நூறாவது இடத்தில் இருந்த மலாவி தொடர் தோல்விகளால் 14 இடங்கள்  சரிந்து 114-வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இதனால் இந்தியா நூறாவது இடத்துக்குள் வந்திருக்கிறது.

பிபா தரவரிசைப் பட்டியலில் நான்கு அணிகள் நூறாவது இடத்தைப் பிடித்திருக்கின்றன. இந்தியாவுடன், நிகர்குவா, லிதூணியா, எஸ்டோனியா ஆகிய அணிகளும் நூறாவது இடத்தைப் பகிர்ந்துள்ளன. இந்த நான்கு அணிகளும் 331 புள்ளிகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆசிய அணிகளில் தற்போது இந்தியா தான் பதினோராவது சிறந்த அணியாக உருவெடுத்துள்ளது. மாலத்தீவுகள் 151-வது இடமும், வங்கதேசம் 193-வது இடமும், நேபாளம் 172-வது இடமும், பூடான் 164-வது இடமும் பெற்றுள்ளன. பாகிஸ்தான் 202-வது இடத்தில் உள்ளது. 

கடந்த  26 ஆண்டுகளில்  பிபா தரவரிசையில் இந்தியா எந்தெந்த இடம் பிடித்தது என்பதை மவுசை நகர்த்தி தெரிந்து கொள்ளுங்கள்.

தரவரிசையில் முதல் பத்து இடத்தில் இருக்கும் அணிகள்! 

1. பிரேசில் 

2. அர்ஜென்டினா 

3. ஜெர்மனி 

4.சிலி 

5. கொலம்பியா 

6. பிரான்ஸ் 

7.பெல்ஜியம் 

8.போர்ச்சுகல் 

9. ஸ்விட்சர்லாந்து 

10.ஸ்பெயின் 

ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் எனும் இங்கிலாந்து பயிற்சியாளர் தான் தற்போது இந்திய அணிக்கு பயிற்சியளித்து வருகிறார். அவரது அரவணைப்பில் இந்தியா விறுவென முன்னேறியுள்ளது.  இரண்டே ஆண்டுகளில் 166-வது இடத்தில் இருந்து 100-வது இடத்துக்குத் தாவியிருக்கிறது. 

இந்தியா கடந்த மார்ச் மாதத்தில் கம்போடியாவை 3-2 என வீழ்த்தியது. மார்ச் 28-ம் தேதி மியான்மரை 1-0 என பந்தாடியது.  இந்த இரண்டு வெற்றிகளும் இந்தியாவின் புள்ளிகள் அதிகரிக்க உதவியுள்ளன. இப்போதைக்கு இந்தியாவின் இடத்துக்கு எந்த பங்கமும் இல்லை. அடுத்த மாதம் ஏழாம் தேதி  நட்பு போட்டியாக லெபனானுடன் ஆடுகிறது இந்தியா. 13-ம் தேதி கிர்கிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெல்லும் பட்சத்தில் புள்ளிப்பட்டியலில் இந்தியா மேலும் முன்னேறும் என எதிர்பார்க்கலாம். 

இந்திய கால்பந்து அணிக்கு வாழ்த்துகளை பகிரலாமே! 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு