Published:Updated:

ஆர்.சி.பி தொடர் தோல்வி எதிரொலி : சாம்பியன் டிராஃபி மீது கவனம் செலுத்தும் டிவில்லியர்ஸ்

ஆர்.சி.பி தொடர் தோல்வி எதிரொலி : சாம்பியன் டிராஃபி மீது கவனம் செலுத்தும் டிவில்லியர்ஸ்
ஆர்.சி.பி தொடர் தோல்வி எதிரொலி : சாம்பியன் டிராஃபி மீது கவனம் செலுத்தும் டிவில்லியர்ஸ்

பரபரப்பாகச் சென்றுகொண்டிருக்கிறது ஐபிஎல் 10-வது சீசன். இந்த சீசனில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் பெங்களூரு அணியும் ஒன்று. கோலி கேப்டன், கெயில், டிவில்லியர்ஸ், கேதர்  ஜாதவ், சாஹல் என மெகா அணியாக, டஃப் ஃபைட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த அணியின் முயற்சிகள் அனைத்தும் புஷ்வானமாக முடிந்துவிட்டது. தொடர் தோல்வியால், கிட்டத்தட்ட அந்த அணியின் ப்ளே ஆஃப் சுற்றுக் கனவு, முடிவுக்கு வந்துள்ளது. 

ஆர்.சி.பி தொடர் தோல்வி எதிரொலி : சாம்பியன் டிராஃபி மீது கவனம் செலுத்தும் டிவில்லியர்ஸ்


இதுகுறித்து டிவில்லியர்ஸ், 'எனது குழந்தையை எனக்கு மிகவும் பிடிக்கும். எனது வாழ்க்கையை மாற்றியது குழந்தைதான். அடுத்த குழந்தை பிறக்க உள்ளது. எனவே, மேலும் பல மாற்றங்கள் காத்திருக்கின்றன. எனது முதல் காதல், கிரிக்கெட்டின் மீதுதான். கிரிக்கெட்டை பலர் பிஸினஸ் என்று சொல்வார்கள். 


ஆனால், என்னால் அதை அப்படிப் பார்க்க முடியாது. இந்த சீசனில் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு, எங்களால் செயல்பட முடியவில்லை. இன்னும் சில போட்டிகள் உள்ளன. ஓரளவுக்கு டீசன்டாக இந்த சீசனை முடிக்க முயற்சிசெய்வோம்.  அடுத்ததாக, சாம்பியன் டிராஃபி வருகிறது. அதில் சிறப்பாக விளையாடி, தென்னாப்பிரிக்க மக்களின் ஆசையை நிறைவேற்ற வேண்டும்' என்றார்.