Published:Updated:

சாம்பியன்ஸ் டிராஃபி 7 அணி வீரர்கள் அறிவிப்பு. யார் IN யார் OUT?

சாம்பியன்ஸ் டிராஃபி 7 அணி வீரர்கள்  அறிவிப்பு. யார் IN யார்  OUT?
சாம்பியன்ஸ் டிராஃபி 7 அணி வீரர்கள் அறிவிப்பு. யார் IN யார் OUT?

சாம்பியன்ஸ் டிராஃபி 7 அணி வீரர்கள் அறிவிப்பு. யார் IN யார் OUT?

மினி உலகக்கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி பதினெட்டாம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் எட்டு அணிகள் கலந்துகொள்ள உள்ளன. இந்தியாவைத் தவிர மற்ற ஏழு அணிகளும் இந்த தொடருக்கான  வீரர்களை அறிவித்து விட்டன. எந்த அணியில் யார் யார் இடம்பெற்றிருக்கிறார்கள், யார் அவுட் என்பதை பார்ப்போமா?

ஆஸ்திரேலியா :-

உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், ஜேம்ஸ் ஃபால்க்னர் ஆகியோரை நீக்கியிருக்கிறது ஆஸ்திரேலிய நிர்வாகம். நீண்ட இடைவெளிக்கு பிறகு மோசஸ் ஹென்றிக்ஸ், கிறிஸ் லின் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

அணி விவரம் :-

ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்) , டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ், ஆரோன் பின்ச், ஜான் ஹாஸ்டிங்ஸ், ஜாஸ் ஹாஸில்வுட், டிராவிஸ் ஹெட், மோசஸ் ஹென்றிக்ஸ், கிறிஸ் லின், கிளென் மேக்ஸ்வெல், ஜேம்ஸ் பட்டின்சன், மிச்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், மாத்யூ வேடு, ஆடம் ஜாம்பா 

 வங்கதேசம் : -

 வேகப்பந்து வீச்சாளர்   ஷபிபுல் இஸ்லாம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் உடன் ஷபிபுல்லும் இணைவதால் அணி பலமடைகிறது. 

அணி  விவரம் : -

தமீம் இக்பால், சவுமியா சர்க்கார், இம்ருல் கயஸ், முஸ்தாபாசுர் ரஹ்மான்,  ஷகிப்  அல் ஹசன், மகமதுல்லா, சபீர் ரஹ்மான், மொசாதக் ஹுசேன், மெஹந்தி ஹாசன், சன்ஸாமுல் இஸ்லாம், மஷ்ரஃபே மோர்தாசா (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம், தஸ்கின் அகமது, ரூபல் ஹுசேன், ஷபிபுல் இஸ்லாம். 

இங்கிலாந்து  :- 

காயத்தால் அவதிப்பட்டிருந்த மார்க்வுட், டேவிட் வில்லி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

அணி விவரம் :- 

இயான் மோர்கன் (கேப்டன்), மொயின் அலி, ஜானி பார்ஸ்டோ, ஜேக் பால், சாம் பில்லிங்ஸ், ஜாஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், லயாம் பிளங்கட், அடில் ரஷீத், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க்வுட்.

நியூசிலாந்து :-

மிச்சேல் மெக்லாகன், ஆடம் மில்னே, கோரே ஆண்டர்சன் ஆகிய மூன்று பேரும் காயத்தில் இருந்து மீண்டதால் அணிக்கு திரும்பியிருக்கின்றனர்.  இஷ் சோதி நீக்கப்பட்டிருக்கிறார். 

அணி விவரம் :-

கேன் வில்லியம்சன் (கேப்டன்) , கோரே ஆண்டர்சன், ட்ரென்ட் போல்ட், நெயில் ப்ரூம், கோலின் டி கிராண்ட்ஹோம், மார்ட்டின் கப்தில், டாம் லாதம், மிச்சேல் மெக்லாகன், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், ஜிதன் படேல், லுக் ராஞ்சி, மிச்செல் சான்ட்னர், டிம் சவுதி, ராஸ் டெய்லர்.

பாகிஸ்தான் :- 

கம்ரன் அக்மலை நீக்கியிருக்கிறது பாக் நிர்வாகம். அவருக்கு பதிலாக அவரது தம்பி உமர் அக்மல் அணியில் இடப்பெற்றிருக்கிறார். அசார் அலியும்  அணிக்குத் திரும்பியிருக்கின்றனர்.

அணி விவரம் :-

சர்பராஸ் அகமது (கேப்டன்) , அசார் அலி, அகமது சேஷாத், முகமது ஹபீஸ், பாபர் அசாம், சோயிப் மாலிக், உமர் அக்மல், பஹார் ஜமான், இமாத் வாசிம், ஹசன் அலி, பஹிம் அஷ்ரப், வஹாப் ரியாஸ், முகமது ஆமீர், ஜுனைத் கான், ஷதாப் கான். 

தென் ஆப்ரிக்கா :-

டேல் ஸ்டெயின், அணியில் சேர்க்கப்பட வில்லை. மோர்னே மோர்கல் மீண்டும் அணிக்குத் திரும்பியிருக்கிறார்.

அணி விவரம் :- 

ஏபி டி வில்லியர்ஸ் (கேப்டன்) , ஹாஷிம் ஆம்லா , குயின்டன் டீ காக், பாப் டூ பிளசிஸ்,  ஜே பி டுமினி, டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், வேய்ன் பார்னெல், ஆண்டிலே பெலுக்வாயோ, ககிஸோ ரபாடா, இம்ரான் தாகீர், டுவைன் ப்ரோடோரியஸ், கேஷவ் மகராஜ், பர்ஹான் பெகர்தீன், மோர்னே மோர்கல் 

இலங்கை :- 

லசித் மலிங்கா, ஆஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் அணிக்குத் திரும்பியிருக்கிறார்கள். 

அணி விவரம் :-

ஆஞ்செலோ மேத்யூஸ்,  உபுல் தரங்கா, நிரோஷன் டிக்வெல்லா, குசால் பெரேரா, குஷால் மெண்டிஸ், சமாரா கப்புகெதரா, அசேலா குணரத்னே, தினேஷ் சந்திமால், லசித் மலிங்கா, சுரங்கா லக்மல், நுவான் பிரதீப், நுவான் குலசேகரா, திசேரா பெரேரா, லக்ஷன் சடங்கன், செக்யூகே பிரசன்னா. 

அடுத்த கட்டுரைக்கு