Published:Updated:

கேப்டன் பதவியை தேர்வுக் குழுதான் முடிவு செய்யும்: கம்பீர்

கேப்டன் பதவியை தேர்வுக் குழுதான் முடிவு செய்யும்: கம்பீர்
கேப்டன் பதவியை தேர்வுக் குழுதான் முடிவு செய்யும்: கம்பீர்
கேப்டன் பதவியை தேர்வுக் குழுதான் முடிவு செய்யும்: கம்பீர்

புது தில்லி: இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பதவி குறித்து தேர்வுக் குழுவினர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் நடைபெற்ற இங்கிலாந்து, ஆஸ்திரேலியத் தொடர்களில் தோனி தலைமையிலான இந்திய அணி படு தோல்வி கண்டது. அதேநேரத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தா அணியை சிறப்பாக வழிநடத்திய கவுதம் கம்பீர், அந்த அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.

இதனால் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக கம்பீர் நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் அது குறித்து பதிலளிக்க மறுத்த கம்பீர். அதை தேர்வுக் குழுவினர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்.

மேலும் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற டிராவிட் இடத்தை நிரப்பும் பொறுப்பு பெரிய விஷயமில்லை. இந்திய வீரர்கள் அனைவரும் சமமானவர்களே. இந்தியாவுக்காக நீங்கள் விளையாடினால், முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். வீரர்கள் அனுபவம் பெறும்போது ஓரளவு முதிர்ச்சியடைந்து விடுவார்கள்' என்றார்.

மேலும் பாகிஸ்தானுடன் விளையாடுவதை வித்தியாசமாக பார்க்கவில்லை. என்னை பொருத்த வரையில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூஸிலாந்து அணிகளுடன் விளையாடுவதைப் போன்றுதான் பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டியையும் பார்க்கிறேன். நாட்டுக்காக விளையாடுவதுதான் முக்கியம். அதுவே பெரிய ஊக்கத்தைக் கொடுக்கும் என்றார்.