Published:Updated:

முதல் இடத்தில் அஸ்வின், ஜடேஜா! கோலிக்கு பின்னடைவு!

Vikatan Correspondent
முதல் இடத்தில் அஸ்வின், ஜடேஜா! கோலிக்கு பின்னடைவு!
முதல் இடத்தில் அஸ்வின், ஜடேஜா! கோலிக்கு பின்னடைவு!

ஐசிசி தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில் டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில், இந்தியாவின் அஸ்வின், ஜடேஜா இருவரும் முதல் இடத்தில் உள்ளனர். ஜடேஜா இரண்டாவது இடத்தில் இருந்தார். பெங்களூரு டெஸ்ட்டில் 7 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் அவர் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார். தரவரிசையில் முதல் இடத்தை, இரு ஸ்பின்னர்கள் பகிர்ந்து கொள்வது இது முதல்முறையாகும்.

முதல் இடத்தில் அஸ்வின், ஜடேஜா! கோலிக்கு பின்னடைவு!

இந்நிலையில், பேட்டிங் தரவரிசையில், இந்திய கேப்டன் கோலி இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் சரியான பங்களிப்பை வழங்க முடியாததால், அவருக்கு தரவரிசையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முதல் இடத்தில், ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நீடிக்கிறார்.

அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா தொடர்ந்து, முதல் இடத்தில் நீடிக்கிறது.