Published:Updated:

முரளி அதிரடியில் வீழ்ந்தது டெல்லி; இறுதிப் போட்டியில் நுழைந்தது சென்னை

முரளி அதிரடியில் வீழ்ந்தது டெல்லி; இறுதிப் போட்டியில் நுழைந்தது சென்னை
முரளி அதிரடியில் வீழ்ந்தது டெல்லி; இறுதிப் போட்டியில் நுழைந்தது சென்னை
முரளி அதிரடியில் வீழ்ந்தது டெல்லி; இறுதிப் போட்டியில் நுழைந்தது சென்னை

சென்னை: முரளி விஜய் விளாசிய அதிரடி சதத்தின் உறுதுணையுடன், டெல்லி டேர்டெவில்ஸ் அணியை அபாரமாக வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப் போட்டிக்கான இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டத்தில், சென்னை 86 ரன்களில் வென்றது.

இப்போட்டியில் 223 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, 16.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்களில் சுருண்டது.

அணியில் அதிகபட்சமாக ஜெயவர்த்தனே 55 ரன்களையும், டெய்லர் 27 ரன்களையும் அடித்தனர். ஏனையோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

சென்னை தரப்பில் அபாரமாக பந்துவீசிய அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், ஜகாதி 2 விக்கெட்டுகளையும், ஹில்ஃபென்ஹாஸ், மோர்கல், பிராவோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

முன்னதாக, சென்னை தனது இன்னிங்ஸ்சில் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு, 222 ரன்கள் குவித்தது. இதுவே இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோராகும்.

துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய், டெல்லி அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். அவர் 58 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார்.

பிராவோ ஆட்டமிழக்காமல் 12 பந்துகளில் 33 ரன்கள் விளாசினார். ரெய்னா 27 ரன்களையும், டோனி 23 ரன்களையும், ஹஸ்சி 20 ரன்களையும் சேர்த்தனர்.

டெல்லி தரப்பில் ஆரோன் 2 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதும். அதில் வெற்றி பெற்றால், ஐபில் போட்டியில் ஹாட்ரிக் சாம்பியன் என்ற பெருமையை சென்னை அடையும்.