Published:Updated:

உலகின் நம்பர் 1 பவுலருக்கு ஐ.பி.எல்லில் இடமில்லை! ரசிகர்கள் அதிர்ச்சி! #IPLAuction #LiveUpdates

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உலகின் நம்பர் 1 பவுலருக்கு ஐ.பி.எல்லில் இடமில்லை! ரசிகர்கள் அதிர்ச்சி! #IPLAuction #LiveUpdates
உலகின் நம்பர் 1 பவுலருக்கு ஐ.பி.எல்லில் இடமில்லை! ரசிகர்கள் அதிர்ச்சி! #IPLAuction #LiveUpdates

உலகின் நம்பர் 1 பவுலருக்கு ஐ.பி.எல்லில் இடமில்லை! ரசிகர்கள் அதிர்ச்சி! #IPLAuction #LiveUpdates

3 மணி அப்டேட் :-

காலையில் ஏலத்தில் எடுக்கப்படாத சில முக்கியமான வீரர்கள் மற்றும் இளம் இந்திய வீரர்களுக்கான ஏலம் தொடங்கியது. 

குப்தில் - நியூசிலாந்தின் அதிரடி தொடக்க வீரர் குப்திலை  காலையில் எந்த அணியும் சேர்த்துக்கொள்ள வில்லை. இந்நிலையில் மாலையில் நடந்த ஏலத்தில் இவரை 50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது  கிங்ஸ் லெவன் பஞ்சாப். 

ஜேசன் ராய் - இங்கிலாந்தின் தொடக்க வீரர் ஜேசன் ராய். மறு ஏலத்தில் இவரை குஜராத் ஒரு கோடிக்கு எடுத்துள்ளது.

சவரப் திவாரி - மும்பை அணி 30 லட்ச ரூபாய்க்கு இவரை எடுத்தது. 

கிறிஸ் ஜோர்டான் - இங்கிலாந்தின் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கிறிஸ் ஜோர்டான் கடந்த சீஸனில் பெங்களூரு அணிக்காக விளையாடினார். இம்முரை ஐதராபாத் அணிக்காக ஆடப்போகிறார். அவருக்கு கிடைத்த தொகை 50 லட்சம்.

கவுல்டர் நைல் -  ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கவுல்டர் நைலை ஏலத்தில் எடுக்க போட்டி ஏற்பட்டது . கொல்கத்தா இவரை 3.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

பிரவீன் துபே - 10 லட்சத்திற்கு இவரை எடுத்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 

பில்லி ஸ்டான்லேக் - 22 வயது ஆஸ்திரேலிய பவுலர் இவர். 30 லட்சத்திற்கு எடுத்தது பெங்களூரு 

பென் லாஃபிளின் - 34 வயது பவுலரான பென்னை சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் 30 லட்சத்திற்கு எடுத்தது.

முகமது சிராஜ் - வேகப்பந்து வீச்சாளரான இவரை எடுக்க சன் ரைஸர்ஸ், புனே, பெங்களூரு மோதின. இறுதியில் 2.6 கோடிக்கு ஐதராபாத்துக்கு விலை போனார்.

அசலா  குணரத்னா -  சமீபத்தில் தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான டி20  தொடரில் சிறப்பாக விளையாடிய இந்த இலங்கை வீரர், பெரிய தொகைக்கு ஏலம் போவார் என எதிர்பார்க்கப்பட்டது. மும்பை அணி 30 லட்சத்திற்கு இவரை அணியில் சேர்த்துக் கொண்டது.

ரோவ்மன் பவல் - வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இருந்து வரும் இன்னொரு டி 20 ஸ்பெஷலிஸ்ட் இவர். 30 லட்சத்திற்கு இவரை எடுத்தது கொல்கத்தா.

டேரன் சமி - கோடிகளில் விலை போவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாருமே போட்டி போடாததால் வெறும் 30 லட்சத்திற்கு பஞ்சாப் அணிக்கு ஏலம் போனார் இரண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற ஒரே கேப்டன்.

உலகின் நம்பர் 1 பவுலருக்கு ஐ.பி.எல்லில் இடமில்லை! ரசிகர்கள் அதிர்ச்சி! #IPLAuction #LiveUpdates

இம்ரான் தாஹீர்

உலகின் நம்பர் 1 பவுலரான இம்ரான்  தாஹீரை எந்த அணியும் எடுக்க வில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒரு டி20 போட்டியில் கூட 5 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்திருந்தார். ஒருநாள் மற்றும் டி20 இரண்டிலும் ஐ.சி.சி  தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ள இம்ரான், ஐ.பி.எல் லில் யாரும் ஏலம் எடுக்காதது கிரிக்கெட் உலகை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

****************************

1 மணி அப்டேட் :- 

அங்கித் பவனே :- டெல்லி அணி இவரை பத்து லட்சத்திற்கு ஏலம் எடுத்தது.

பிரித்வி ஷா :- மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இவரை யாரும் ஏலத்தில் எடுக்காதது ஆச்சர்யம் கூட்டியுள்ளது.

உன்முகத் சந்த் :- கடந்த சீஸனில் மும்பை அணிக்காக ஆடிய இவரை இம்முறை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

தன்மே அகர்வால் :- ஐதராபாத்தைச் சேர்ந்த தன்மே அகர்வாலை ஐதராபாத் சன் ரைஸர்ஸ் அணி பத்து லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது.

கிருஷ்ணப்பா கவுதம் :- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் அசத்திய கிருஷ்ணப்ப கவுதமுக்கு ஏலத்தில் செம கிராக்கி. ஆல்ரவுண்டரான இவரை மும்பை அணி இரண்டு கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது.

முகமது நபி :-  ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் முகமது நபியை முப்பது லட்சத்திற்கு சன் ரைசர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

ராகுல்  திவேதியா :- பஞ்சாப் அணி இவரை 25 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது 

ஆதித்யா தாரே  :-  விக்கெட் கீப்பரான தாரேவை எடுக்க புனே அணியும், டெல்லி அணியும் ஆர்வம் காட்டின. இறுதியில் 25 லட்சத்திற்கு டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது.

எக்லாவ்யா திவேதி :-  குஜராத், சன் ரைஸர்ஸ் இரண்டும் கடும் போட்டி போட்டன. இறுதியில் 75 லட்சத்திற்கு சன் ரைஸர்ஸ் ஐதராபாத் ஏலத்தில் எடுத்தது.

அங்கீத் சவுதாரி :- புனே, குஜராத்  உள்ளிட்ட அணிகள் இவரை எடுக்க போட்டி போட்டன. 65 லட்சத்தில் ஏலம் முடியும் தருவாயில் இருந்த போது பெங்களூரு அதிரடியாக நுழைந்து ஏலத் தொகையை கூடியது. முடிவில் இரண்டு கோடிக்கு பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது.

நாது சிங் :-  ஐம்பது லட்ச ரூபாய்க்கு இவரை ஏலத்தில் பெற்றது குஜராத் லயன்ஸ்.

உலகின் நம்பர் 1 பவுலருக்கு ஐ.பி.எல்லில் இடமில்லை! ரசிகர்கள் அதிர்ச்சி! #IPLAuction #LiveUpdates

ரஷீத் கான்

ரஷீத் கான் :-  ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இளம் பவுலர் ரஷீத் கான் இன்று  நான்கு கோடிக்கு ஏலம் போயிருக்கிறார். மும்பை, புனே, ஐதராபாத் உள்ளிட்ட அணிகள் கடும் போட்டி போட்டன. கடந்த  உலகக்கோப்பை டி20 தொடரில் கலக்கிய இந்த சுழற்பந்துவீச்சாளரை நான்கு கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ஐதராபாத்.

பேசில் தம்பி:- எர்ணாகுளத்தைச் சேர்ந்த பேசில் தம்பியை குஜராத் அணி 85 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது.

தேஜாஸ் சிங் பருக்கா :- பத்து லட்ச ரூபாய்க்கு  குஜராத் அணிக்காக விளையாடப் போகிறார் பருக்கா.

பிரவீன் தாம்பே :- சன் ரைஸர்ஸ் இவரை பத்து லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது. கடந்த வருடம் இவர் குஜராத் அணிக்காக ஆடியது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ் வோக்ஸ் :- இங்கிலாந்து பவுலர் கிறிஸ் வோக்ஸ்க்கு இரண்டு கோடி ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஐதராபாத், கொல்கத்தா இரண்டு அணிகளும் போட்டி போட்டன. 4.20 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணிக்காக விளையாடப் போகிறார் கிறிஸ் வோக்ஸ்.

கார்ன் ஷர்மா :-  ஆல்ரவுண்டர் கார்ன் ஷர்மாவை மும்பை அணியும், குஜராத் அணியும் ஏலத்தில் எடுக்க போட்டி போட்டன. இறுதியில் 3.2 கோடிக்கு மும்பை அணிக்கு ஆட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ரிஷி தவான் :-  பஞ்சாப் அணிக்காக ஆடி வந்த ரிஷி தவான், இந்த சீசனில் 55 லட்சத்திற்காக கொல்கத்தா அணிக்கு விளையாடவுள்ளார். 

வருண் ஆரோன் :-  இந்தியாவின் அதிவேக பந்துவீச்சளர் வருண் ஆரோனை ஏலத்தில் எடுக்க பஞ்சாப் அணியும், குஜராத் அணியும் கடும் போட்டி போட்டன. 2.8 கோடிக்கு இவரை பெற்றது பஞ்சாப் அணி. 

முருகன் அஷ்வின் :- கடந்த ஆண்டு புனே அணிக்கு 4.5 கோடிக்கு விலை போன தமிழக வீரர் முருகன் அஸ்வின், இந்த முறை டெல்லி அணிக்காக ஆடப்போகிறார். அவரை 1 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது டெல்லி அணி.

12 மணி அப்டேட் :-

Uncapped Players  என சொல்லப்படும் ஐ.பி.எல்/ சர்வதேச போட்டிகளில் ஆடிய அனுபவம் இல்லாத வீரர்களுக்கான ஏலம் தொடங்கியது.

இதில் சேலத்தை சேர்ந்த பவுலரான நடராஜனை எடுக்க பல்வேறு அணிகளும் போட்டி போட்டன. புனே, டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய அணிகள் முட்டி மோதின. இறுதியில் மூன்று கோடிக்கு ஏலத்தில்  எடுத்திருக்கிறது  பஞ்சாப் அணி. நடராஜனை ஏலத்தில் எடுக்க பஞ்சாப் சார்பாக வந்திருந்த ஷேவாக் மிகவும் ஆர்வம் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் நம்பர் 1 பவுலருக்கு ஐ.பி.எல்லில் இடமில்லை! ரசிகர்கள் அதிர்ச்சி! #IPLAuction #LiveUpdates

11 மணி அப்டேட் :-

பந்துவீச்சாளர்கள் மற்றும் விக்கெட் கீப்பர்களுக்கான முதற்கட்ட ஏலம் நடந்து முடிந்திருக்கிறது 

ககிஸோ ரபடா : - 

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ககிசோ ரபாடாவை ஏலத்தில் எடுக்க பல அணிகள் போட்டி போட்டன. இறுதியில் ஐந்து கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்திருக்கிறது டெல்லி டேர்டெவில்ஸ்.

டிரென்ட் போல்ட் :- 

ஐதராபாத் அணிக்காக கடந்த சீஸனில் விளையாடினார் டிரென்ட் போல்ட். நியூசிலாந்து வீரரான போல்ட் இறுதி ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். விக்கெட் வேட்டை நடத்தும் இந்த பவுலரை ஐந்து கோடிக்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது  கொல்கத்தா.

தைமல் மில்ஸ் :-

இங்கிலாந்து வீரர்  தைமல் மில்ஸ், உலகம் முழுவதும் டி 20 லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருபவர். இந்தியாவுக்கு எதிரான  தொடரிலும் இவர் சிறப்பாக விளையாடியுள்ளார். இவரை ஏலத்தில் எடுக்க மும்பை, பஞ்சாப், கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட அணிகள் கடும் போட்டி போட்டன. இறுதியில் பெங்களூரு அணி இவரை 12 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது.

கம்மின்ஸ் : -

ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் இந்த அளவுக்கு விலை போவார் என யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க முடியாது. இவரை ஏலத்தில்  எடுக்க ஐதராபாத் அணியும், டெல்லி அணியும் கடும் போட்டி போட்டன. இறுதியில் டெல்லி அணி 4.5 கோடிக்கு இவரை ஏலத்தில் எடுத்தது.

மிச்சேல் ஜான்சன் :-

சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டாலும் ஜான்சனுக்கு மவுசு குறையவில்லை. இவருக்கு அடிப்படை விலையாக இரண்டு கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இவரை மும்பை அணி இரண்டு கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

விலை போகாத பவுலர்கள் : -

இஷாந்த் ஷர்மா, கைல் அபாட், கவுல்டர் நைல், பிரக்யான் ஓஜா, லக்ஷன் சடங்கன், இஷ் சோதி உள்ளிட்ட பவுலர்கள் இதுவரை விலை போக வில்லை.  அணி உரிமையாளர்கள் விரும்பினால் இன்று மீண்டும் இவர்கள் மதியம் ஏலத்துக்கு வருவார்கள்.

விக்கெட் கீப்பர்கள் : - 

ஜானி பேர்ஸ்டோ, சந்திமால், ஜான்சன் சார்லஸ், பென் டங்க், ஆண்ட்ரே பிளட்சர் உள்ளிட்ட வீரர்கள் விலை போகவில்லை. நிக்கோலஸ் பூரான் மட்டும் மும்பை அணிக்கு முப்பது லட்ச ரூபாய்க்கு விலை போனார்.

*********************************************

ஐ.பி.எல் 2017 சீஸன்  ஏப்ரல் மாதம் ஆரம்பிக்க உள்ளது. 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஐ.பி.எல்லுக்கு இது பத்தாவது சீஸன்.இன்று காலை முதல் ஐ.பி.எல் ஏலம் நடந்து வருகிறது.பேட்ஸ்மேன் மற்றும் ஆல்ரவுண்டர்கள்  ஏலம் இதுவரை முடிந்திருக்கிறது. 

விலை போகாத வீரர்கள் - அலெக்ஸ் ஹேல்ஸ், ஜேசன் ராய், மார்ட்டின் கப்தில், ராஸ் டெய்லர், கிறிஸ் ஜோர்டான், இர்பான் பதான்,ஃபைசல், சவுரப் திவாரி, சீன் அபாட் உள்ளிட்ட வீரர்களை யாரும் எடுக்க வில்லை. இவர்கள் மதியம் மீண்டும் ஏலத்துக்கு வருவார்கள் என எதிர்பார்க்கலாம்.

பவான்  நெகி : -

கடந்த வருடம் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுத்திருந்த டெல்லி அணி இவரை இந்த ஆண்டு கழற்றிவிட்டது. இந்த முறை குஜராத், புனே, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட அணிகள் இவரை ஏலத்தில் எடுக்க போட்டி போட்டன. இறுதியில் பெங்களூரு அணி இவரை ஒரு கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

ஏஞ்சலோ மேத்யூஸ் :-

இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸுக்கு இரண்டு கோடி அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டது. இவரை ஏலத்தில் எடுக்க யாரும் போட்டிக்கு வரவில்லை. கடைசி நேரத்தில் டெல்லி அணி இவரை இரண்டு கோடிக்கு எடுத்தது.

கோரே ஆண்டர்சன் :- 

மும்பை அணி இம்முறை இவரைக் கழற்றிவிட்டது. இந்த ஏலத்தில் டெல்லி அணி ஒரு கோடிக்கு இவரை எடுத்திருக்கிறது. ஆல்ரவுண்டர் ஆண்டர்சனை வெறும் ஒரு கோடிக்கு எடுத்ததில் மகிழ்ச்சியில் இருக்கிறது டெல்லி அணி.

உலகின் நம்பர் 1 பவுலருக்கு ஐ.பி.எல்லில் இடமில்லை! ரசிகர்கள் அதிர்ச்சி! #IPLAuction #LiveUpdates

பென் ஸ்டோக்ஸ் :- 

கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் பென் ஸ்டோக்ஸ் ஓவரில் தான் நான்கு சிக்ஸர்களை விளாசி மிரட்டனார் கார்லஸ் பிராத்வெயிட். இந்தியச் சுற்றுப்பயணத்தில் இவருக்கும் கோலிக்கும் தொடர்ந்து மோதல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியத் தொடரில் இந்திய வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியதால் ஸ்டோக்ஸ்க்கு மவுசு அதிகரித்தது. இந்த ஐ.பி.எல்லில் அதிக தொகைக்கு ஏலம் போவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போல இன்றைய தினம், இதுவரை அதிக தொகைக்கு ஏலம் போன வீரராக இவர் விளங்குகிறார். இவருக்கு அடிப்படை  தொகையாக இரண்டு  கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் இருந்தே மும்பை அணியும் பெங்களூரு அணியும் இவரை ஏலத்தில் எடுக்கப் போட்டி போட்டன. ஒரு கட்டத்தில் பெங்களூரு விலக,டெல்லி போட்டிக்கு வந்தது. பத்துக் கோடி வரை முட்டிப்பார்த்த  மும்பை பின்பு பின்வாங்கியது. டெல்லிக்கு ஏலம் போவார் என எதிர்ப்பார்க்கப் பட்ட அந்நிலையில்  ஐதராபாத் திடீரென போட்டியில் நுழைந்தது.ஐதராபாத்துக்கு  ஏலம் போகும் தருவாயில் இருந்தபோது திடுமென புனே போட்டிக்கு வந்தது. இறுதியில் 14.5 கோடிக்கு புனே அணி அவரை ஏலத்தில் எடுத்தது. 

- பு.விவேக் ஆனந்த் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு