Published:Updated:

சச்சினுக்கு எம்.பி. பதவி சரியா?

சச்சினுக்கு எம்.பி. பதவி சரியா?
சச்சினுக்கு எம்.பி. பதவி சரியா?

விவாதக்களம்  

சச்சினுக்கு எம்.பி. பதவி சரியா?

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் விளையாட்டுத் திறனை கவுரப்படுத்தும்  வகையில்,அவ்ரை மாநிலங்களவையின் நியமன எம்.பி.யாக ஆக்கியுள்ளது மத்திய அரசு!

மத்திய அரசின் இந்த முடிவுக்கு வரவேற்பு ஒருபுறம் இருந்தாலும்,சச்சினின் புகழை தனது  அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்த காங்கிரஸ் முயற்சி செய்வதாக பா.ஜனதா குற்றம்  சாட்டியுள்ளது.

”தெண்டுல்கரை கவுரவப்படுத்துவதாக இருந்தால் அவருக்கு பாரத ரத்னா விருது கொடுத்து  இருக்கலாம்.எம்.பி.யாக நியமித்ததன் மூலம் அவரை காங்கிரஸ் அரசியலுக்கு இழுத்து  வந்துவிட்டது” என்று கூறியுள்ளார் அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான கோபிநாத்  முண்டே!

இதுஒருபுறமிருந்தாலும்,தெண்டுல்கர் 100-வது சதம் அடிக்கும் முயற்சியில் பலமுறை  தோல்வி அடைந்தபோது அவர் ஓய்வு பெறவேண்டும் என்று விமர்சனத்துக்கு  ஆளானார்.அது தவிர இவ்வளவு சம்பாதித்தும்,தனது வெளிநாட்டு காருக்கு வரி விலக்கு  கோருகிறாரே என்றும் விமர்சனத்திற்கு ஆளானார்.

இதுதவிர மும்பையில் கட்டிய சொந்த வீட்டிற்கு மாநகராட்சி விதிமுறைகளை மீறியதும்  சர்ச்சையை கிளப்பியது.இப்போது அவரது நியமன எம்.பி. பதவியும் அரசியல்  சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

சச்சினை தலையில் வைத்து கொண்டாடுபவர்கள் கூட ”சச்சின் அரசியல் சுழலில்  சிக்கக்கூடாது;இந்த பதவியையும் ஏற்கக் கூடாது!” எனக் கூறியுள்ளனர்.

நீங்கள் என்ன கருதுகிறீர்கள்...?!