Published:Updated:

மும்பையை மூழ்கடித்தது 'ஆல்ரவுண்ட்' டெல்லி!

Vikatan Correspondent
மும்பையை மூழ்கடித்தது 'ஆல்ரவுண்ட்' டெல்லி!
மும்பையை மூழ்கடித்தது 'ஆல்ரவுண்ட்' டெல்லி!
மும்பையை மூழ்கடித்தது 'ஆல்ரவுண்ட்' டெல்லி!

மும்பை: ஆல்ரவுண்டில் அசத்திய டெல்லி டேர்டெவில்ஸ் அணி மிக எளிதில் மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்தது.

ஐபிஎல் சீசன் 5-ன் 19-வது லீக் ஆட்டத்தில், 93 ரன்கள் மட்டுமே எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் சேவாக் தலைமையிலான டெல்லி அணி களமிறங்கியது.

அந்த அணி 14.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, வெற்றி இலக்கை எட்டியது. சேவாக் 32 ரன்களையும், ஜெயவர்த்தனே ஆட்டமிழக்காமல் 17 ரன்களையும் எடுத்தனர். ஓஜா 13 ரன்களையும் , டெய்லர் ஆட்டமிழக்காமல் 11 ரன்களையும் சேர்த்தனர்.

முன்னதாக, ஹர்பஜன் தலைமையிலான மும்பை அணி, 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 92 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக, ஹர்பஜன் 33 ரன்களையும், ரோகித் ஷர்மா 29 ரன்களையும் எடுத்தனர். ஏனையோர் ஒற்றை இலக்க ரன்களிலேயே ஆட்டம் இழந்தனர்.

டெல்லி தரப்பில் மிகச் சிறப்பாக பந்துவீசிய நதீம், மோர்கல், அகார்கர், யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், இர்பான் பதான் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இப்போட்டியில் 4 ஓவர்கள் வீசி, வெறும் 16 ரன்கள் கொடுத்து, 2 விக்கெட்டுகளை வீழ்த்திய டெல்லியின் நதீம், ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி, பாயின்ட் டேபிளில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. மும்பை 4-ம் இடத்தில் உள்ளது.