Published:Updated:

கோலி விளாசல் - இரட்டை சதம்!

Vikatan Correspondent
கோலி விளாசல் - இரட்டை சதம்!
கோலி விளாசல் - இரட்டை சதம்!
கோலி விளாசல் - இரட்டை சதம்!

இந்தியா-இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 400 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆனது. அதை தொடர்ந்து ஆடி வரும் இந்திய அணி 4வது நாள் மதிய உணவு இடைவேளையின் போது 579 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து ஆடி வருகிறது.

இந்திய கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் விளாசி தொடர்ந்து ஆடி வருகிறார். இந்த ஆண்டு அவர் அடிக்கும் மூன்றாவது இரட்டை சதம் இது. அதே போல, ஓரே ஆண்டில் மூன்று இரட்டை சதம் விளாசிய இந்திய வீரரும் விராட் கோலி தான்.