Published:Updated:

கணினியில் விளையாட வந்துவிட்டது ஒரு 'வாவ்' கேம்! - DON BRADMAN CRICKET 17 டிரெய்லர்

கணினியில் விளையாட வந்துவிட்டது ஒரு 'வாவ்' கேம்! - DON BRADMAN CRICKET 17  டிரெய்லர்
கணினியில் விளையாட வந்துவிட்டது ஒரு 'வாவ்' கேம்! - DON BRADMAN CRICKET 17 டிரெய்லர்

கணினியில் விளையாட வந்துவிட்டது ஒரு 'வாவ்' கேம்! - DON BRADMAN CRICKET 17 டிரெய்லர்

கிரிக்கெட் லவ்வர்கள் கணினிகளில் கிரிக்கெட் கேமுக்கு என குறிப்பிட்ட ஜி.பி ஒதுக்கிவிடுவார்கள். உலகம் முழுவதும் கணினிகள், மொபைல், லேப்டாப், டேப்லெட் என எந்த வடிவத்திலும் அதிகம் விளையாடப்படும் கேம்களில் கிரிக்கெட்டுக்கும் முக்கிய இடம் உண்டு. 

தற்போதைய சூழ்நிலையில், தெருவில் கிரிக்கெட் ஆட முடியாதவர்கள், வயதானவர்கள் என அத்தனை பேரும் தங்களது கிரிக்கெட் ஆசையைத் தீர்த்துக் கொள்வது கிரிக்கெட் வீடியோ கேம் ஆடுவது மூலமாகத் தான். இந்தியாவை ஆஸ்திரேலியா தோற்கடித்தால்,  அன்று இரவே, லேப்டாப்பில் கிரிக்கெட் கேமை போட்டு, ஆஸ்திரேலியாவைத் துவைத்து எடுத்து டென்ஷனைத் தீர்த்துக் கொள்ளும் கிரிக்கெட் வெறியர்களும் இங்கே அதிகம். 

EA 2007 கிரிக்கெட் கேமுக்கு பிறகு ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில், நல்ல கிராபிக்ஸ் அம்சங்களோடு எந்த கிரிக்கெட் கேமும் இல்லை, இன்றும் கூட EA 2007 கிரிக்கெட் கேமைத் தான் பலரும் விளையாடி வருகிறார்கள். 2011க்கு  பிறகு சில ஆண்டுகள்  பி.சி (PC) கேம்களில் புதிதாக வந்த எந்த கிரிக்கெட் கேமும் சரியில்லை. 

டி ஆர் எஸ், பவர் பிளே, பவுன்சர் என ஆட்ட விதிகளில் வந்த மாற்றங்கள் எதுவும்  புதிதாக  வந்துகொண்டிருக்கும்  வீடியோ கேமில் சரிவர அப்டேட் செய்யப்பட வில்லை  எனப் பல ரசிகர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இதனை சமூக வலைதளங்கள் மூலமாகவும் அதிகளவு விவாதித்துக்  கொண்டு தான் இருந்தார்கள். இந்தச் சூழ்நிலையில்  தான் ஆஸ்திரேலியாவில் இருக்கும்  பிக் ஆன்ட் ஸ்டூடியோஸ் (BIG ANT STUDIOS) நிறுவனம் பிராட்மேன் 14 கேமை வடிவமைத்து, ட்ரூ ப்ளூ எண்டெர்டெயின்மென்ட் வழியாக வெளியிட்டது. 

360 டிகிரி ஷாட் டெலிவரி, மூன்றாவது அம்பயரிடம் முறையிடுதல், நெட் பிராக்டிஸ் போட்டிகள் என சகல அம்சங்களோடும், ஷாட் விளையாடும்போது பந்துகள் மூவ்மென்ட்டில் துல்லியத்தன்மையையும் மேம்படுத்தி கேமை வெளியிட்டது.  EA கேம்ஸ் அளவுக்கு  தெறி ஹிட் இல்லையென்றாலும், ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றது. ஆஸ்திரேலிய நிறுவனம் என்பதாலோ என்னவோ,  உள்ளூர் ஆஸ்திரேலிய போட்டிகள், இங்கிலாந்து கவுண்டி அணிகள் உள்ளிட்டவை அதிகம் இந்த கேமில் இருந்தன, ஐ.பி.எல், ரஞ்சி போன்றவை இல்லை. இதனால் இந்தியாவில் இந்த கேமுக்கு நல்ல ரிவ்யூக்கள் கிடைத்தாலும், பெரிய அளவில் விற்பனை ஆக வில்லை. 

பிராட்மேன் 17 வெர்ஷனில் எல்லா குறைகளும் நிவர்த்தி செய்யப்பட்டு, அப்டேட்டுகளுடன் வரும் என 2014-ம் ஆண்டே அறிவித்திருந்தது  பிக் ஆன்ட் ஸ்டுடியோஸ்.  இந்நிலையில் தற்போது டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸை ஒட்டிய தினங்களில் அதிகாரபூர்வமாக கேமை வெளிவிடப்போவதாக அறிவித்துள்ளது பிக் ஆன்ட் ஸ்டுடியோஸ். ஆனால் பிளே ஸ்டேஷன் 4, எக்ஸ்பாக்ஸ் ஒன் ஆகியவற்றில் மட்டும் தான் இப்போதைக்கு இந்த கேமை ஆட முடியும். 

பிராட்மேன் 16 டிரைலரை சமீபத்தில் வெளியிட்டுள்ளது இந்நிறுவனம். டிரைலரை பார்க்க :- 

சரி இந்த வெர்ஷனில்  என்ன  ஸ்பெஷல்? 

மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்ப உதவியுடன் வீரர்களின் வடிவங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன, பெண்கள் கிரிக்கெட்டும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது, ஆன் லைன் கேமும் மேம்படுத்தப்பட்டுள்ளது, இதன் மூலம் ஆப்லைனை விட ஆன்லைனில்  விளையாடும் நபர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பிராட்மேன் அப்டேட் குறித்து இரண்டு வருடங்களாக காத்திருந்த கிரிக்கெட்  கேமர்களின் எதிர்ப்பார்ப்பை இந்த வெர்ஷன் பூர்த்தி செய்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க  வேண்டும். 

- பு.விவேக் ஆனந்த் 

அடுத்த கட்டுரைக்கு