Published:Updated:

என் பதக்கம் மீண்டும் வேண்டும் ! - தடகள வீராங்கனை சாந்தி

என் பதக்கம் மீண்டும் வேண்டும் ! - தடகள வீராங்கனை சாந்தி

என் பதக்கம் மீண்டும் வேண்டும் ! - தடகள வீராங்கனை சாந்தி

என் பதக்கம் மீண்டும் வேண்டும் ! - தடகள வீராங்கனை சாந்தி

என் பதக்கம் மீண்டும் வேண்டும் ! - தடகள வீராங்கனை சாந்தி

Published:Updated:
என் பதக்கம் மீண்டும் வேண்டும் ! - தடகள வீராங்கனை சாந்தி

புதுக்கோட்டையைச் சேர்ந்த தடகள வீராங்கனை சாந்திக்கு  தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராக பணி நியமனம் கிடைத்து இருக்கிறது.  நீண்ட வருட போராட்டமே இதை சாத்தியப்படுத்தியிருக்கிறது.



அரசுப் பணி கிடைத்த ஆசுவாசத்தை சாந்திக்கு அளித்தாலும், சாந்தியப் போலவே பாலின சர்ச்சைக்கு உள்ளான தென் ஆப்பிரிக்க வீராங்கனை செமானியாவுக்கு அவரின் பதக்கம் திரும்ப கிடைக்க அவர் நாட்டு மக்கள்  தொடர்ந்து குரல் கொடுத்தார்கள். அதன் விளைவு செமானியாவுக்கு என்ற தனி அங்கீகாரத்தையும், மரியாதையையும் அந்நாட்டு அரசாங்கம் கொடுத்திருக்கிறது. செமானிய மீண்டும் ஒலிம்பிக் போட்டிகள் கலந்துக்கொள்கிறார். நம் நாட்டில் சாந்தியைத் தெரியாத பலர் உண்டு என்பது வேதனை. 

அரசு பணி கிடைத்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்கு அரசிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதே போல் நான் பெற்ற பதக்கத்தை திரும்ப பெற வேண்டும். அதற்கான முயற்சியும் எடுக்கப்படும் எனச் அரசு தரப்பில் சொல்லப்பட்டு இருக்கிறது. விரைவில் அது நடக்கும் என நம்புகிறேன். இப்போது 35 விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். அவர்கள் எல்லாமே எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களை வெற்றி வீரர்களாக ஜொலிக்க வைப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு” என்கிறார் சாந்தி.

சாந்தி மீண்டும் பெற விரும்பும் அவரின் பதக்கத்துக்கான வேண்டுகோள், பத்தாண்டுகள் கடந்தும் சரியான பதில் கிடைக்கவில்லை.  அரசு தரப்பிலிருந்து, 2006-ல் சாந்திக்கு போன் மூலமாக மட்டுமே தடை செய்யப்பட்ட செய்தி சொல்லப்பட்டு இருக்கிறது. இந்தத் தடை குறித்து சாந்தியின் தரப்பிலிருந்து சில கேள்விகளும் எழுப்பட்டு வருகின்றன. 



தடைப் பற்றிய எந்தவித அதிகாரபூர்வ அறிக்கையும் சாந்தியிடம் கொடுக்கப்படாது ஏன்?

சாந்தியின் பாலினச் சோதனை குறித்த ஆவணங்கள்கூட சாந்தியிடம் கொடுக்காதது ஏன்? 

எதன் அடிப்படையில் சாந்தியின் பாலினச் சோதனை உறுதிசெய்யப்பட்டது ? 

சாந்திக்கு பாலினச் பரிசோதனை நடைப்பெற்றபோது, அங்கே இந்திய மருத்துவர் இல்லாமல் போனது ஏன்? சாந்தியின் சார்பில் பேச யாருமே இல்லாதபோது, அவரின் விளக்கங்களை கேட்காமலே, அவரைத் தடை செய்ய இந்தியன் ஒலிம்பிக் சங்கம் அனுமதித்தது ஏன்?

அப்போ சாந்தியின்மேல் தடை இருக்கா? இல்லையா? யார் தடை செய்தார்கள்? எந்த தெளிவான விபரங்களுக்கும் இன்றும் பதில் இல்லை. இதுபோன்ற அடிப்படை விளக்கங்களைக்கூட கொடுக்காமல் ஒரு ஒலிம்பிக் வீராங்கணை ஓட விடாமல் வைத்திருப்பது, இந்தியாவுக்கான இழுக்கே. இந்தக் கேள்விகளுக்கு இந்திய தேசிய விளையாட்டு ஆணையமும், இந்திய தடகள அமைப்பு மற்றும் இந்தியன் ஒலிம்பிக் சங்கத்தின் அனுமதியில்லாமல் சாந்தியிடமிருந்து பதக்கம் பறிக்கப்பட்டு இருக்காது. இந்தக் கேள்விகளுக்கு சரியான விளக்கங்கள் இன்றளவு கொடுக்காமல் தட்டிக்கழிப்பது முறையல்ல. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!



பதக்கம் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பின், சாந்தியின் தரப்பிலிருந்து எழுப்பப்படும் இன்னும் பல கேள்விகள் பதில் இல்லாமல் நீள்கிறது. 

முதலில் அந்தப் பதக்கம் சாந்தியுடையது எனும் பார்வையிலிருந்து, இந்தியாவின் பதக்கம் என்பதை அதிகாரிகள் முழுமையாக உணர வேண்டும்.  இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்து, அவரின் பதக்கத்தைத் திரும்ப கொடுத்து, தடையை நீக்குவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அதுதான் பல பதக்கங்களை இந்தியா பெறுவதற்கான பாதையைத் திறக்கும். 


- கே. அபிநயா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism