Published:Updated:

காய்ச்சலில் ரெய்னா... கைகலப்பில் மாரடோனா ... வீட்டுச் சாப்பாடுக்கு ஏங்கிய கோலி! #SportsBytes

காய்ச்சலில் ரெய்னா... கைகலப்பில் மாரடோனா ... வீட்டுச் சாப்பாடுக்கு ஏங்கிய கோலி! #SportsBytes
காய்ச்சலில் ரெய்னா... கைகலப்பில் மாரடோனா ... வீட்டுச் சாப்பாடுக்கு ஏங்கிய கோலி! #SportsBytes

காய்ச்சலில் ரெய்னா... கைகலப்பில் மாரடோனா ... வீட்டுச் சாப்பாடுக்கு ஏங்கிய கோலி! #SportsBytes

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!காய்ச்சலில் ரெய்னா... முதல் ஆட்டத்தில் மிஸ்!

காய்ச்சலில் ரெய்னா... கைகலப்பில் மாரடோனா ... வீட்டுச் சாப்பாடுக்கு ஏங்கிய கோலி! #SportsBytes


காய்ச்சல் காரணமாக நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சுரேஷ் ரெய்னா பங்கேற்க மாட்டார். இந்த தகவலை பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்துள்ளது.  

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம், தர்மசாலாவில் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா இடம் பெற்றிருந்தார். மோசமான ஃபார்ம் காரணமாக கடந்த ஓராண்டாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்த ரெய்னா, சமீபத்தில் உள்ளூர் போட்டிகளில் ஜொலித்ததன் மூலம் மீண்டும் அணிக்குத் திரும்பினார். மும்பையில் கடந்த ஆண்டு நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டிதான், ரெய்னா கடைசியாக இந்திய அணியின் ஜெர்ஸியில் ஆடிய போட்டி.

இந்தமுறை தன்னை மீண்டும் நிரூபித்து, அணியில் நிரந்தர இடம் பிடிக்கக் காத்திருந்தவருக்கு நேற்று திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. பெங்கால் அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியின்போது ரெய்னா உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். இதனால், அவர் இன்னும் இந்திய அணியினருடன் இணையவில்லை. 

மாரடோனா கை கலப்பு

கால்பந்து ஜாம்பவான் மாரடோனாவின் கால்களைப் போலவே நாக்கும் கண்டபடி சுழலும். சர்ச்சை இல்லாமல் அவரால் இருக்க முடியாது. சமீபத்தில் ரோம் நகரில், போப் ஃபிரான்சிஸ் சார்பில் அமைதிக்கான நட்பு கால்பந்து போட்டி நடந்தது. இதில் முன்னாள் வீரர்கள், ஜாம்பவான்கள் பங்கேற்றனர். 

ப்ளூ, ஒயிட் என இரு அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில் மாரடோனா, ப்ளூ அணியில் இடம்பெற்றிருந்தார். முதல் பாதி முடிந்து ஓய்வு அறைக்குத் திரும்பும்போது, அர்ஜென்டினாவை சேர்ந்த மான்செஸ்டர் யுனைடெட் முன்னாள் வீரர் ஜுவான் செபாஸ்டியன் வெரோன் உடன் பேச்சு கொடுத்தார் மாரடோனா.  ஆரம்பத்தில் இருந்தே மாரடோனாவுடன் பேசுவதை வேரான் விரும்பவில்லை. ஆனால் மாரடோனா விடாமல் அவரிடம் ஏதோ சொல்ல, பதிலுக்கு வேரோன் ஏதோ சொல்ல, வாக்குவாதம் முற்றியது. டிரெஸிங் ரூம் செல்லும் வழியில் இருவரும் கைகலப்பில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அதற்குள் சக வீரர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மாரடோனாவை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.  உண்மையில், மாரடோனா அவரைக் கெட்ட வார்த்தையில் திட்டியதாக இத்தாலி பத்திரிகைகள் எழுதியுள்ளன.

வேடிக்கை என்னவெனில், 2008 முதல் 2010 வரை மாரடோனா, அர்ஜென்டினா பயிற்சியாளராக இருந்தபோது அந்த அணியில் வேரோன் இடம்பெற்றிருந்தார்.

இந்தியா வருகிறார் இப்ராஹிமோவிச்?

காய்ச்சலில் ரெய்னா... கைகலப்பில் மாரடோனா ... வீட்டுச் சாப்பாடுக்கு ஏங்கிய கோலி! #SportsBytes


‛அடுத்த ஐ.எஸ்.எல். சீசனில் ஸ்வீடனை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் இப்ராஹிமோவிச்சை இந்தியாவுக்கு அழைத்து வருவேன்’ என, டில்லி டைனமோஸ் அணியின் பயிற்சியாளர் ஜியான்லுகா ஜாம்ப்ரோட்டா தெரிவித்தார். 

உலக கோப்பை வென்ற இத்தாலி அணியில் இடம்பெற்றிருந்த ஜாம்ப்ரோட்டா, இன்டர் மிலன் கிளப் அணியில் விளையாடியபோது, இப்ராஹிமோவிச்சுடன் நல்ல நெருக்கம். இந்த நட்பை பயன்படுத்தி அடுத்த சீசனில், அந்த கால்பந்து ஜாம்பவானை இந்தியாவுக்கு அழைத்து வருவதாக ஜாம்ப்ரோட்டா உறுதியளித்துள்ளார்.

‛‛ஐரோப்பிய கால்பந்தில் இருந்து ஓய்வுபெற்ற பின் இந்தியா வந்து விளையாடுவதை இப்ராஹிமோவிச் விரும்ப மாட்டார். இந்தியாவில் அவருக்கு ரசிகர்கள் அதிகம். எனவே இந்திய ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில், அடுத்த ஆண்டு இந்தியா வந்து அவர் ஐஎஸ்எல் தொடரில் விளையாடி பின், தன் கால்பந்து வாழ்வுக்கு முழுக்கு போடுவார் என நினைக்கிறேன். அவரை டில்லி டைனமோஸ் அணிக்காக விளையாட வற்புறுத்துவது என் பொறுப்பு’’ என்றார் ஜாம்ப்ரோட்டா. 

ரொனால்டோவை விட மெஸ்சிதான் என் சாய்ஸ்

காய்ச்சலில் ரெய்னா... கைகலப்பில் மாரடோனா ... வீட்டுச் சாப்பாடுக்கு ஏங்கிய கோலி! #SportsBytes


ஒவ்வொரு ஆண்டும், உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் யார் என்பதைத் தேர்வு செய்யும் ‛பேலன் டூ ஆர்’ விருதின்போது, கால்பந்து உலகில் கலவரம் நடக்கும். கடந்த சில ஆண்டுகளாக மெஸ்சி, ரொனால்டோ இருவரும்தான் மாறி மாறி இந்த விருதை வாங்கி வருகின்றனர். இந்த ஆண்டு போர்ச்சுகல், யூரோ கோப்பை வென்றிருப்பதால்,  ரொனால்டோ  ‛பேலன் டூ ஆர்’ விருதைத் தட்டிச் செல்வார் என கணிக்கப்படுகிறது. 

ஆனால், 2004-ல் இந்த விருதை வென்ற பிரேசிலை சேர்ந்த ஜாம்பவான் ரொனால்டினோ, அர்ஜென்டினாவை சேர்ந்த மெஸ்சியை தேர்வு செய்துள்ளார். ‛‛எல்லா வீரர்களும் தங்கள் பணியை சிறப்பாகச் செய்கின்றனர். இதில் பெஸ்ட் யார் என்பதை தேர்வு செய்வது கடினம். இருந்தாலும், என் தேர்வு மெஸ்சிதான். மீண்டும் அவர் அர்ஜென்டினா அணிக்குத் திரும்பியதில் மகிழ்ச்சியாக உள்ளார்.  நானும் ஹேப்பி. ஏனெனில் அவர் என் நண்பர். இன்னொரு விஷயம், பீலே, மாரடோனா இருவரைத்தான், கால்பந்தின் ஆல் டைம் கிரேட் என்று கருதுகிறேன். இந்த உச்சத்தை இன்னும் மெஸ்சி, ரொனால்டோ இருவரும் எட்டவில்லை’’ என்றார் ரொனால்டினோ.

வீட்டுச் சாப்பாடுக்கு ஏங்கிய கோலி

காய்ச்சலில் ரெய்னா... கைகலப்பில் மாரடோனா ... வீட்டுச் சாப்பாடுக்கு ஏங்கிய கோலி! #SportsBytes


இந்தூர் டெஸ்டில் நியூஸிலாந்தை துவம்சம் செய்து, தொடரை வென்றது இந்தியா. கையோடு டெஸ்ட் ரேங்கிங்கில் நம்பர் -1 இடம் பிடித்ததற்கான தண்டாயுதத்தை சுனில் கவாஸ்கரிடம் இருந்து வாங்கினார் விராட் கோலி. அதை பந்தாவாக அணியினருடன் ஃபோட்டோ எடுத்த கோலி, அந்த படத்தை  ட்விட்டரில் பெருமையுடன் அப்டேட் செய்திருந்தார். அதற்கு கீழே வாழ்த்தும் பாராட்டும் குவிந்தது.

வாழ்த்தியவர்களுக்கு நன்றி சொன்ன கோலி, ‛‛அன்புக்கு நன்றி. இன்று இரவு வீட்டுக்கு செல்கிறேன். கூட ஒருநாள் வீட்டில் தங்கி இருப்பதும், வீட்டுச் சாப்பாடு சாப்பிடுவதும்தான் சந்தோஷமே’’ என ட்விட் தட்டி இருந்தார்.  வீட்டுக்கு சென்றவர் வளர்ப்பு நாய் உடன் ரிலாக்ஸாக இருந்து விட்டு, இன்று மீண்டும் தர்மசாலா கிளம்பி விட்டார். 


ஒன்டேலயும் கலக்குங்க ப்ரோ!

- தா.ரமேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு