Published:Updated:

நியூஸிலாந்து வாஷ் அவுட்..! சொந்த மண்ணில் இந்தியா அபாரம்

நியூஸிலாந்து வாஷ் அவுட்..! சொந்த மண்ணில் இந்தியா அபாரம்
நியூஸிலாந்து வாஷ் அவுட்..! சொந்த மண்ணில் இந்தியா அபாரம்
நியூஸிலாந்து வாஷ் அவுட்..! சொந்த மண்ணில் இந்தியா அபாரம்

நியூஸிலாந்து அணிக்கு எதிராக கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 321 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அஸ்வின் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நியூஸிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 197 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தாவில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் 178 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இந்தூரில் நடந்து வந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 557 ரன்கள் குவித்தது. கேப்டன் கோலி அபாரமாக விளையாடி இரட்டை சதம் விளாசினார். இவர் குவித்த 211 ரன்னில் 20 பவுண்டரிகள் அடங்கும். ரஹானே 188 ரன்கள் குவித்தார். புஜாரா 41 ரன்னும், ரோகித் சர்மா 51 ரன்னும் எடுத்தனர்.  

பின்னர் முதன் இன்னிங்சை தாெடர்ந்த நியூஸிலாந்து அணி 299 ரன்னுக்கு ஆட்டம் இழந்தன. சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூஸிலாந்து தரப்பில் குப்தில் 72 ரன்னும், லதம் 53 ரன்னும், நீசாம் 71 ரன்னும் அடித்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் வீழ்ந்தனர்.

நியூஸிலாந்து வாஷ் அவுட்..! சொந்த மண்ணில் இந்தியா அபாரம்

258 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. தொடக்க வீரர் முரளி விஜய் 19 ரன்னில் வெளியேறினார். பின்னர் புஜாரா, கம்பீருடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டன. தனது 22-வது அரை சதம் அடித்த கம்பீர், பாட்டீல் பந்தில் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து கோலி களம் கண்டார். இவர் 17 ரன்னில் வெளியேறினார். பின்னர் ரஹானே வந்தார். இவர், புஜாராவுடன் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். டெஸ்ட் போட்டியில் தனது 8-வது சதத்தை விளாசிய புஜாரா 101 ரன் எடுத்தார். ரஹானே 23 ரன் எடுத்திருந்தார். இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக கேப்டன் கோலி அறிவித்தார். 474 ரன்களை வெற்றி இலக்காக நியூஸிலாந்து அணிக்கு நிர்ணயித்தது இந்திய அணி.

இதைத் தொடர்ந்து கடினமாக இலக்குடன் நியூஸிலாந்து அணி வீரர்கள் களம் இறங்கினர். இவர்கள் இந்திய சுழல் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தது விக்கெட்டை பறிகொடுத்தனர். நீசம், பாட்டீல், ஹென்றி ஆகியோர் டக் அவுட் ஆனார்கள். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வீழ்ந்தனர். முடிவில் நியூஸிலாந்து 153 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 321 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. மேலும் டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அஸ்வின் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இரண்டு அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 16-ம் தேதி தர்மசாலாவில் நடைபெறுகிறது.