Published:Updated:

இந்திய, நியூஸிலாந்து வீரர்களின் ரிப்போர்ட் கார்டு! #Interactive

இந்திய, நியூஸிலாந்து வீரர்களின் ரிப்போர்ட் கார்டு! #Interactive
இந்திய, நியூஸிலாந்து வீரர்களின் ரிப்போர்ட் கார்டு! #Interactive


நியூஸிலாந்துக்கு எதிரான இந்தூர் டெஸ்டில், அஷ்வின்  சுழலில் மாயாஜாலம் நிகழ்த்தி 13 விக்கெட்டுகள் வீழ்த்தி தனி ஒருவனாக ஜொலிக்க,  இந்தியா 321 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 3-0 என முழுமையாக வென்றது. அதோடு, டெஸ்ட் தரவரிசையில் இந்தியா நம்பர் -1 என்ற அந்தஸ்தையும் அதிகாரப்பூர்வமாக பெற்றது.  இந்தத் தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டவர்களின் பெர்ஃபார்மென்ஸ் எப்படி இருந்தது என்பதை அறிய க்ளிக்குங்கள்!

அடடா அஷ்வின்:

* இந்தூர் டெஸ்டில் அஷ்வின் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  இதுவரை 39 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், ஆறாவது முறையாக பத்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதற்குமுன் அணில் கும்ப்ளே மட்டுமே எட்டு முறை பத்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். கும்ப்ளே 132 போட்டிகளில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. 

* இரண்டாவது இன்னிங்சில் அஷ்வின் ஃபீல்டர்களின் உதவியின்றி எல்.பி.டபிள்யு. மற்றும்  போல்டு முறையில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். 

* இந்த டெஸ்ட் தொடர் தொடங்குவதற்குமுன் 200 விக்கெட் என்ற மைல்கல்லை அஷ்வின் எட்டுவாரா என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடரின் முடிவில் அவர் 220 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஜாம்பவானாக உருவெடுத்துள்ளார்.

* ஏழாவது முறையாக மேன் ஆஃப் தி சீரிஸ் விருது வாங்கி அசத்தியுள்ளார் அஷ்வின். 
 

* கடந்த 2012ம் ஆண்டுக்குப் பின் இந்தியா கடைசியாக வென்ற 8 டெஸ்ட் தொடர்களில் தொடர் நாயகன் விருது வென்றவர்கள் விவரம்:

அஷ்வின் - 2012 - மேற்கிந்தியத் தீவுகள்
அஷ்வின் - 2012 - நியூஸிலாந்து
அஷ்வின் - 2013 - ஆஸ்திரேலியா
ரோகித் சர்மா - 2013 - மேற்கிந்தியத் தீவுகள்
அஷ்வின் - 2015 - இலங்கை
அஷ்வின் - 2015- தென் ஆப்ரிக்கா
அஷ்வின் -2016 - மேற்கிந்தியத் தீவுகள்
அஷ்வின் - 2016 - நியூஸிலாந்து 

- தா.ரமேஷ், ஆனந்த்