Published:Updated:

புஜாரா அசத்தல் சதம்

புஜாரா அசத்தல் சதம்
புஜாரா அசத்தல் சதம்
புஜாரா அசத்தல் சதம்

இந்தூரில் நடந்து வரும் நியூஸிலாந்து அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டியில் புஜாரா அபாரமாக விளையாடி சதம் அடித்தார். முதல் இன்னிங்சில் இந்திய அணி 557 குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் கோலி 211 ரன்னும், ரஹானே  188 ரன்னும் எடுத்தனர். நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்சில் 299 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி விரைவாக ரன் குவிப்பில் ஈடுபட்டது. கெளதம் கம்பீர் 50 ரன்னும், முரளி விஜய் 19  ரன்னும் எடுத்தனர். புஜாரா அபாரமாக விளையாடி தனது 8-வது சதத்தை நிறைவு செய்தார். தற்போது இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 101 ரன்னில் களத்தில் உள்ளார். முதல் இன்னிங்சில் இரட்டை சதம் விளாசிய கோலி 17 ரன்னில் ஆட்டம் இழந்தார்.