Published:Updated:

உலக கோப்பை கபடி: இந்திய மகளிர் அணி சாம்பியன்!

உலக கோப்பை கபடி: இந்திய மகளிர் அணி சாம்பியன்!
உலக கோப்பை கபடி: இந்திய மகளிர் அணி சாம்பியன்!
உலக கோப்பை கபடி: இந்திய மகளிர் அணி சாம்பியன்!

பாட்னா: உலக கோப்பை மகளிர் கபடியின் இறுதிப் போட்டியில் ஈரானை வீழ்த்தி, இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.

பீகார் மாநிலம் உதயமாகி நூற்றாண்டு கொண்டாட்டத்தையொட்டி, மகளிருக்கான முதலாவது உலக கோப்பை கபடி போட்டி பாட்னா நகரில் நடத்தப்பட்டது.

இந்தியா, அமெரிக்கா, ஈரான், ஜப்பான், மெக்சிகோ, கொரியா, இத்தாலி, இலங்கை உள்பட 16 அணிகள் கலந்து கொண்டன.

இதன் இறுதிப் போட்டியில் மமதா பூஜாரி தலைமையிலான இந்தியாவும், ஈரானும் பலப்பரீட்சை நடத்தின.

இந்திய வீராங்கனைகளின் திறமையான 'ரைடு', தந்திரமான ஆட்டத்தால் முதல் பாதியில் 19-11 என்ற கணக்கில் முன்னிலை பெற்றனர். இரண்டாவது பாதியில் இந்திய வீராங்கனைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் ஆடி, கடைசி வரை முன்னிலையை தக்க வைத்துக் கொண்டனர்.

விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் இந்தியா 25-19 என்ற புள்ளி கணக்கில் ஈரானை தோற்கடித்து உலக சாம்பியன் ஆனது.

இந்திய அணிக்கு சாம்பியன் கோப்பை மற்றும் தங்கப்பதக்கங்களை பீகார் மாநில துணை முதல்வர் சுஷில்குமார் மோடி வழங்கினார்.