Published:Updated:

எம்.எஸ்.தோனி 360 டிகிரி...ராஞ்சி முதல் லார்ட்ஸ் வரை! #NammaThalaDhoni

எம்.எஸ்.தோனி 360 டிகிரி...ராஞ்சி முதல் லார்ட்ஸ் வரை! #NammaThalaDhoni
எம்.எஸ்.தோனி 360 டிகிரி...ராஞ்சி முதல் லார்ட்ஸ் வரை! #NammaThalaDhoni

இந்திய அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவரான  மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகியிருக்கிறது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தோனி வேடத்தில் நடித்திருக்கிறார். பிரபல இயக்குனர் நீரஜ் பாண்டே இயக்கியிருக்கிறார். 

எளிய மனிதர்களின் வெற்றிக்கதை அசாத்தியமானது! ஏகப்பட்ட வலி நிறைந்தது!  எங்கோ ஒரு ஊரில், கிரிக்கெட் என்றால் என்ன என்பது கூட தெரியாத  ஒரு சிறுவன்  பின்னாளில் இந்திய கிரிக்கெட் அணியில் புயலாய் நுழைந்தான்.  கிரிக்கெட் புத்தகத்தில் இல்லாத ஷாட்களை ஆடி பிரமிக்க வைத்தான்,  தனது அவுட் ஆஃப் தி பாக்ஸ் சிந்தனைகளால்  பல ஜாம்பவான்கள் சாதிக்காததையும்  சாதித்துக்காட்டி  உலகின் தலைசிறந்த கேப்டனாக முத்திரை பதித்தான். இன்றைக்கு பல இளைஞர்களின் ரோல் மாடல் அவன் தான் .. மன்னிக்கவும்.. அவர்  தான். 

இந்தியாவில் கிரிக்கெட்டை 3 ஜி வேகத்தில் பரப்பிய அந்த மாயக்காரர் மகேந்திர சிங் தோனி.  கிரிக்கெட்டே தெரியாத ஒருவர் எப்படி உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனாக மாறினார்?  சச்சினை பார்ப்பதையே வாழ்நாள் லட்சியமாக வைத்திருந்தவர் பின்னாளில் எப்படி சச்சின் இருக்கும் அணியில் கேப்டனாக உயர்ந்தார்? உலகின் அனைத்து ஐ.சி.சி கோப்பைகளையும் தனதாக்கியது எப்படி? வாருங்கள் சுவையான வரலாற்றை திரும்பி பார்ப்போம். 

தோனி பிறந்தது முதல் வெற்றிகரமான கேப்டன் ஆனது வரை, அத்தனை விஷயங்களையும் ஆடியோ தொடராக வெளியிட்டது விகடன் ஆடியோ யூடியூப் சேனல். அதன் ஒவ்வொரு எபிசோடை பற்றிய அறிமுகம் இங்கே, 

EPISODE 1 : - 

இந்தியாவில் 5 ஜி வேகத்தில் கிரிக்கெட்டை பரப்பிய தோனி 

EPISODE 2 :- 

கூல் கேப்டனின் அப்பா, அம்மா, குடும்பம் பற்றி உங்களுக்கு தெரியுமா ?  தோனி கால்பந்தில் இருந்து கிரிக்கெட்டுக்கு மாறிய கதை இது தான். 

EPISODE 3 :- 

சச்சினா வந்து சோறு போடுறான்? இந்த கிரிக்கெட்டை கட்டிக்கிட்டு அழுவுறத விடு என தோனியின் அப்பா ஏன் தோனியை திட்டினார்? வறுமையான வீட்டில் இருந்து ஊட்டச்சத்து உணவை தோனி எப்படி பெற்றார்? 

EPISODE 4 :- 

ஒரு பக்கம் குடும்பத்தை காப்பாத்தணும்னு பிரஷர், இன்னொரு பக்கம் அப்பாவின் கனவுகள், மற்றொரு பக்கம் தனது கனவையும் துரத்த வேண்டும்? தோனி செய்தது என்ன ?

EPISODE 5 :-

தோனிக்கு மட்டும் பயிற்சியாளர் இருநூறு ரூபாய் கூடுதலாக கொடுத்தது ஏன்?  அணியின் மற்ற வீரர்கள் தோனி மீது பொறாமை பட்டபோது கேப்டன் சொன்னது என்ன?

EPISODE 6 :-

யுவராஜை எப்போது தோனி சந்தித்தார்? தோனியும் யுவராஜும் நண்பர்களான தருணம் இது.

EPISODE 7 :-

தோனி முதன் முதலில் ரஞ்சிக் கோப்பைக்குள் நுழைந்தது எப்போது தெரியுமா? தோனியை இதற்காகத்தான் தேற்றினார் யுவராஜ் சிங். 

EPISODE 8 :- 

கிரிக்கெட்டில் யாரோட ஃபேன்? தோனிக்கு பைக் ஏன் பிடிக்கும்? எப்போது தோனி முதன் முதலில் சதம் அடித்தார்? ஆடியோவை கேளுங்களேன். 

EPISODE 9 :- 

தோனி வாழ்க்கையில் மிகப்பெரிய டிவிஸ்ட் நடந்தது இப்போது தான்? என்ன சம்பவம் நடந்தது? 

EPISODE 10 :- 

கார் ஃபிரேக் டவுன், பிளைட்டை புடிக்க முடியல அப்போ பயிற்சியாளருக்கு தோனி கால்  பண்ணினார்.  வா, இன்னும் பொறுமையா கூட வா என பயிற்சியாளர் சொல்ல விதியை  நொந்தார் தோனி. 

EPISODE 11 :- 

சக போட்டியாளருடன் நண்பர் ஆன தோனி? சச்சினை முதன் முதலில் தோனி இப்போது தான் சந்தித்தார்.

EPISODE 12 :- 

தோனியிடம் தண்ணி வாங்கி குடித்த பிறகு சச்சின் அவுட் ஆக, அபசகுனமோ என எண்ணிய தோனி, அதுக்கப்பறம் தோனி ஒரு மிகப்பெரிய வாய்ப்பு கிடைச்சது. அது தான் தோனியின் வாழ்க்கையை மாற்றியது. 

EPISODE 13 :- 

அனிமேஷ் குமார் கங்குலியின் இன்டெர்வியூவில் தோனி பாஸ் ஆனாரா? வேலை கிடைத்ததா? 

EPISODE 14 :-

தோனிக்கு கேப்டன் ஆசைய தூண்டியது யார்? அப்பாவிடம் ஆசீர்வாதம் வாங்கிய தோனி

EPISODE 15 :-

தோனிக்கு வேலைக்கான லெட்டர் வந்துச்சு. தோனி ஒழுங்கா வேலை பார்க்கலைனு புகார் போனப்ப என்ன ஆச்சு? 

EPISODE 16 :- 

தோனி நல்லா விளையாடுறான். இவனை இந்திய அணிக்கு சேர்க்கணும்னு சொன்னது யார் தெரியுமா? இவர் மட்டும் இல்லைனா இன்னிக்கு தோனி அணியில் இருந்திருப்பாரான்னு சந்தேகம் தான்.

EPISODE 17:- 

வேலையை தோனி ராஜினாமா செய்தது இதற்கு தான். ராஜினாமாவுக்கு பிறகு தோனி, அவரது நண்பர்களோடு அடிச்ச கூத்து இருக்கே! 

EPISODE 18 :- 

அப்பா மயக்கமடைய பதறிய தோனி, ஈஸ்ட் ஜோன்க்காக ஆடுன தோனி, ஆசிஷ் நெஹ்ராவை வெளுத்துக் கட்டிய கதை இது. 

EPISODE 19 :-

புது வாய்ப்பு, புது இடம், நிறைய பணம்னு இனி எல்லாமே உன்னை வந்து சேரும் - வெளிநாட்டுக்கு புறப்பட்ட தோனிக்கு அட்வைஸ் செய்த அவரது அப்பா.

EPISODE 20:- 

தோனியோட மிக மோசமான ஃபெர்ஃபார்மென்ஸ் இப்போது தான் நடந்தது. மிகுந்த கவலைக்குள்ளானார் தோனி. ஆனா அடுத்த மேட்ச் தோனி ஒரு விஷயத்தை செஞ்சார். அது எந்த அளவுக்கு பயனளித்தது? 

EPISODE 21 :-

கம்பீரும், தோனியும் இணைந்து கலக்கிய மேட்ச் இது. இந்த மேட்ச் தான் தோனி இந்திய அணிக்குள் நுழைய வாய்ப்பு ஏற்படுத்தியது.

EPISODE 22 :- 

தோனிக்கு ஏர்போர்ட்ல  செம வரவேற்பு இருந்துச்சு. அடுத்த சில நாளில் நண்பன் காதல் தோல்வியால் விஷம் குடித்தார். அப்போ தான் தோனி தனது காதலைப் பற்றி மனம் திறந்தார். 

EPISODE 23 :- 

தோனியை அணிக்குள் கொண்டு வந்த கேப்டன் கங்குலி. தோனியை தேர்வு செய்ய சச்சின், டிராவிட் என்ன சொன்னாங்க? 

EPISODE 24 :- 

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது இந்த மீட்டிங்கில் தான். அப்போது தோனிக்கு சிபாரிசு செய்தது கங்குலி

EPISODE 25 :- 

தோனி அணிக்கு தேர்வு செய்யப்பட்ட விஷயத்தை தோனிக்கு சொன்னது யார்?

EPISODE 26 :-

டிசம்பர் 26, 2004 யை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து விட முடியாது. சுனாமி வந்த அந்த தினத்தில் தோனி வங்கதேசத்தில் இருந்தார். சுனாமியை கேள்விப்பட்ட போது தோனி பதறினார்.

EPISODE 27:- 

பாகிஸ்தான் கூட தோனி ஒரு அபாரமான செஞ்சுரி அடிக்க, அதன் பிறகு தோனி செம வைரல் ஆனார் ..

EPISODE 28 :-

கிரேக் சாப்பலுக்கும், கங்குலிக்கும் எப்போதும் ஆகாது. கங்குலியைப்பார்த்து விளையாட லாயக்கு இல்லைனு சொன்ன சேப்பல். டெஸ்ட்டில் தோனி நுழைந்து இப்போது தான். டிசம்பருக்கும், தோனிக்கும் இடையேயான தொடர்பை தெரிந்து கொள்ளுங்கள்.

EPISODE 29 :- 

டெஸ்டுக்கும், ஒருநாள் போட்டிக்கும் ப்ரொபஷனல் விக்கெட் கீப்பராக தோனி இந்தியாவுக்கு கிடைத்தார். பாகிஸ்தானுக்கு எதிராக  தோனி படைத்த ஒரு மகத்தான  இன்னிங்ஸ் இது.

EPISODE 30 :- 

தோனியை கேப்டனாக்க சச்சின் என்ன சொன்னார் தெரியுமா? சச்சின் டி20 போட்டியில் இருந்து ராஜினாமா ஆனது இதற்காகத்தான்.

EPISODE 31 :-

தோனியின் அண்ணன் குறித்து கவலைப்பட்ட அப்பா, கேப்டன் ஆன தோனி.

EPISODE 32:-

தோனியின் தலைமையில் முதல் மேட்ச் ஆடிய  இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிரான அந்த மேட்ச் என்னாச்சு? 

EPISODE 33 :- 

தோனிக்கு அதிர்ஷ்டம் என்று சொல்ல முடியாது. அதிர்ஷ்டத்தால் வளர்ந்தவர் என விமர்சனம் வைப்பதற்கு முன்பு, தோனியின் திறமையை தெரிந்துக் கொள்வது அவசியம்.

EPISODE 34 :-

உலகக் கோப்பையை இந்தியா ஜெயிக்க, தோனிக்கு மாஸ் எகிறியது. ஒரு நாள் போட்டிகளுக்கும் தோனி கேப்டன் ஆன சமயம் இது.

EPISODE 35 :-

இந்தியாவின் பொற்காலம் என்றால் அது தோனியின் தலைமையின் கீழ் இந்தியா ஆடிய (2007 -2011) தான். தோனி இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டார்.   

-பு.விவேக் ஆனந்த் 

ஓவியம்  - கார்த்திகேயன் மேடி 

அடுத்த கட்டுரைக்கு