Published:Updated:

பாண்ட்யாவிடம் தோனி சொன்ன ரகசியம்- இதுதான் வெற்றிக்கு காரணம்!

பாண்ட்யாவிடம் தோனி சொன்ன ரகசியம்- இதுதான் வெற்றிக்கு காரணம்!
பாண்ட்யாவிடம் தோனி சொன்ன ரகசியம்- இதுதான் வெற்றிக்கு காரணம்!

யார்க்கர் வீச வேண்டாம் என பாண்ட்யாவிடம் தாம் கூறியதாக என்று வங்கதேசம் அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு இந்திய அணி கேப்டன் தோனி  தெரிவித்தார்.
 

பாண்ட்யாவிடம் தோனி சொன்ன ரகசியம்- இதுதான் வெற்றிக்கு காரணம்!

உலகக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், வங்கதேச அணியை இந்திய அணி எதிர்கொண்டது. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில்,  ஒரு ரன் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம்,  அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

போட்டிக்கு பிறகு விருது வழங்கும் நிகழ்ச்சியில் இந்திய அணியின் கேப்டன் தோனி பேசுகையில், "நாங்கள் சில விஷயங்களை திட்டமிட்டது போல் செயல்படுத்தவில்லை. பாண்ட்யா யார்க்கர் பந்தை வீசக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். நேர்த்தியாக பந்தை ஸ்டம்புக்கு வெளியே வீச வேண்டும் என்று  பாண்ட்யாவிடம் நான் சொன்னேன்.

அதே நேரத்தில் ‘வைடு’ ஆகிவிடாமல் இருக்குமாறும் கேட்டுக்கொண்டேன். எங்களது திட்டத்தை ஹர்த்திக் பாண்ட்யா சிறப்பாக செயல்படுத்தி கடைசி பந்தை வீசினார். பும்ரா பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது. அவரது 2வது ஓவரில் ரன்களை வாரி கொடுத்து இருந்ததால் நெருக்கடி ஏற்பட்டது. இதேபோல கேட்சையும் தவறவிட்டார். மிஸ் பீல்டிங்கும் இருந்தது. ஆனால் ஒட்டு மொத்தமாக அவரது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. எங்களது பந்துவீச்சும் அபாரமாக இருந்தது" என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு