Published:Updated:

மெல்போர்ன் டெஸ்ட் நாள் 2: இந்தியா 214/3

மெல்போர்ன் டெஸ்ட் நாள் 2: இந்தியா 214/3
மெல்போர்ன் டெஸ்ட் நாள் 2: இந்தியா 214/3

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 65 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்திருந்தது.

அப்போது, நிதானமாக பேட் செய்து வந்த டிராவிட் 68 ரன்களுடனும், 'நைட் வாட்ச்மேன்' இஷாந்த் ஷர்மா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

முன்னதாக, கம்பீர் 3 ரன்களில் ஆட்டமிழக்க, சேவாக் 83 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் சேவாக் 8,000 ரன்களை கடந்து, புதிய சாதனை படைத்தார்.

இந்த இன்னிங்ஸ்சில் தனது 100 சதத்தை அடித்து சாதனை படைப்பார் என எதிர்பார்க்கபட்ட சச்சின் டெண்டுல்கர் 73 ரன்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்றினார்.

முன்னதாக, ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸ்சில் 333 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.