Published:Updated:

நாட்டிங்ஹாமில் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இந்தியர்!

Vikatan Correspondent
நாட்டிங்ஹாமில் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இந்தியர்!
நாட்டிங்ஹாமில் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இந்தியர்!

ஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 4வது ஆஷஸ் டெஸ்ட் தொடர்,  நாட்டிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய வம்சாவளி வீரர் ஒருவரும், இங்கிலாந்து அணிக்காக களமிறங்கினார்.

நாட்டிங்ஹாமில் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இந்தியர்!

காயமடைந்த இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்சுக்கு பதிலாக களமிறங்கிய அனுஜ் தால், 19 வயதே நிரம்பியவர். இங்கிலாந்து அணியின் 12வது வீரராக இருந்த அவருக்கு, ஸ்டோக்ஸ் காயமடைந்ததையடுத்து இந்த வாய்ப்பு கிடைத்தது.

கடந்த 1996ஆம் ஆண்டு பிறந்த அனுஜ் தால், 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணிக்காக விளையாடி வந்தார். நாட்டிங்ஹாமில் உள்ள டர்பன் பள்ளியில் அவர் படித்து வருகிறார். நாட்டிங்ஹாம்ஷயர் லெவன் அணியிலும் அவர் இடம் பிடித்துள்ளார். ஆல்ரவுண்டரான அனுஜ் தால், மித வேக பந்துவீச்சாளரும் கூட.

ஆஷஸ் தொடரில், இந்த 4வது டெஸ்ட் போட்டியைபொறுத்த வரை இந்தியரான ரவியும், பாகிஸ்தானியரான அலிம் தாரும் நடுவர்களாக பணியாற்றி வருவதும் இன்னொரு விஷேசம். டெஸ்ட் போட்டியில் இந்தியரும், பாகிஸ்தானியரும் நடுவர்களாக பணியாற்றுவது 5வது முறை ஆகும்.

இதற்கு முன் கடந்த 1997ஆம் ஆண்டு, வெங்கட்ராகவன், ஜாவேத் அக்தர் ஆகியோர் பாகிஸ்தான்- தென்ஆப்ரிக்க அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டிக்கு நடுவர்களாக பணியாற்றியுள்ளனர்.