Published:Updated:

வெளிநாட்டில் சோனையான ஆஸ்திரேலியா: நாட்டிங்ஹாம் போலீஸ் கூட கிண்டல் அடிக்குது...!

Vikatan Correspondent
வெளிநாட்டில் சோனையான ஆஸ்திரேலியா: நாட்டிங்ஹாம் போலீஸ் கூட கிண்டல் அடிக்குது...!
வெளிநாட்டில் சோனையான ஆஸ்திரேலியா: நாட்டிங்ஹாம் போலீஸ் கூட கிண்டல் அடிக்குது...!

வெளிநாட்டு மண்ணில் இந்திய வீரர்களை சோனைகள் என்று  மட்டம் தட்டுவது ஆஸ்திரேலியர்களின் வழக்கம். எந்த நாட்டுக்கு சென்றாலும், 'நாங்கள் சிங்கம்டா..!' என்று அலட்டிக் கொள்வார்கள்.

வெளிநாட்டில் சோனையான ஆஸ்திரேலியா: நாட்டிங்ஹாம் போலீஸ் கூட கிண்டல் அடிக்குது...!

கடந்த மூன்று மாதத்துக்கு முன்தான் உலகச் சாம்பியன் ஆன அணி, இப்போது இங்கிலாந்து சென்று சம்மட்டி அடி வாங்கி வருகிறது. அதுவும் 4வது ஆஷஸ் போட்டியில், முதல் இன்னிங்சில் வெறும் 60 ரன்களுக்கு அவுட் ஆகி, மிகப் பெரிய அவமானத்தை சந்தித்தது.

அது மட்டுமல்ல 2வது இன்னிங்சிலும் ஆஸ்திரேலிய அணி,  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இங்கிலாந்து அணி 331 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில், 2வது நாள் ஆட்ட முடிவில் 241 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது. இதனால் கிட்டத்ததட்ட இங்கிலாந்து அணியின் வெற்றி உறுதியாகி விட்டது.

இந்நிலையில் போட்டி நடந்து வரும் நாட்டிங்ஹாம் நகர போலீசும் கூட ஆஸ்திரேலிய வீரர்களை கிண்டலடிக்க ஆரம்பித்து விட்டது. நாட்டிங்ஹாம் நகர போலீஸ் ட்விட்டரில், '' ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி சிக்கலில் சிக்கியுள்ளது. உதவிக்கு யாரையாவது அனுப்பி வைக்க முடியுமா? '' என்று புகார் வந்திருப்பதாக அது கூறியுள்ளது.