Published:Updated:

பறக்கும் விமானத்தில் இருந்து குதிக்கப் போகிறார் தோனி!

Vikatan Correspondent
பறக்கும் விமானத்தில் இருந்து குதிக்கப் போகிறார் தோனி!
பறக்கும் விமானத்தில் இருந்து குதிக்கப் போகிறார் தோனி!

ய்வில்  இருந்து வரும் இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் தோனி, பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து சாகசம் நிகழ்த்தவுள்ளார்.

பறக்கும் விமானத்தில் இருந்து குதிக்கப் போகிறார் தோனி!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா நகரில் அமைந்திருக்கும் 'எலைட் பாரா ரெஜிமெண்ட்' ராணுவ முகாமில் இணைந்து, அவர் பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் இருந்து பாராசூட்டில் குதிப்பதற்காக பயிற்சி பெற்று வருகிறார்.  கடந்த 5ம் தேதி முதல் சிறப்பு பயிற்சி பெறுவதற்காக இந்த முகாமில் அவர் வந்து சேர்ந்தார்.

தோனிக்கு பயிற்சி அளிக்கும் ராணுவ உயரதிகாரிகள் கூறுகையில், "இருவார கால பயிற்சிக்கு பின்னர் ஐந்து முறை தோனி ராணுவ விமானத்தில் இருந்து பாரசூட் மூலம் கீழே குதித்து சாகசம் நிகழ்த்துவார்" எனத் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றதற்காக தோனி,  இந்திய ராணுவத்தின் கௌரவ லெப்டினெண்ட்டாக நியமிக்கப்பட்டார். தனது ஓய்வுக்கு பிறகு ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக கடமையாற்ற வேண்டும் என்றும், இதுவே எனது சிறுவயதில் இருந்து தான் வளர்த்து வந்த இலட்சியக் கனவு எனவும் தோனி கூறியிருந்தது நினைவு கொள்ளத்தக்கது.