Published:Updated:

பாகிஸ்தான்-இலங்கை கிரிக்கெட் போட்டி: சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பாகிஸ்தான்-இலங்கை கிரிக்கெட் போட்டி: சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது!

இந்தூர்: பாகிஸ்தான்-இலங்கை அணிகள் விளையாடிய டி-20 கிரிக்கெட் போட்டியன்று பணம் வைத்து சூதாட்டம் நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோடிய டி-20 கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தப் போட்டியை மையமாக வைத்து மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நகரில் பணம் வைத்து ‘ஆன்லைன்’ மூலம் சூதாட்டம் நடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, கட்ஜு காலனியில் உள்ள ஒரு வீட்டை போலீசார் சுற்றிவளைத்து சோதனையிட்டனர்.

அப்போது, அங்கிருந்தபடி ஆன்லைன் மூலம் சூதாட்டத்துக்கான பணப் பரிவர்த்தனையை செய்து கொண்டிருந்த அஜய் பர்யானி (34) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து ஒரு லேப்டாப், எல்.இ.டி. டி.வி., நான்கு செல்போன்கள் மற்றும் 90 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், போலீசாரால் கைது செய்யப்பட்ட அஜய் பர்யானிக்கு சர்வதேச அளவில் பிரபல கிரிக்கெட் சூதாட்டப் புள்ளிகளுடன் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டு தலைமறைவாக இருக்கும் அஜய் பர்யானி கூட்டாளிகள் இருவரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு