Published:Updated:

சச்சினுக்கு பாரத ரத்னா வழங்குக: ஹஜாரே

Vikatan Correspondent
சச்சினுக்கு பாரத ரத்னா வழங்குக: ஹஜாரே
சச்சினுக்கு பாரத ரத்னா வழங்குக: ஹஜாரே
சச்சினுக்கு பாரத ரத்னா வழங்குக: ஹஜாரே

புனே: இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று மூத்த சமூக ஆர்வலர் அண்ணா ஹஜாரே வலியுறுத்தினார்.

அண்ணா ஹஜாரே தனது சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் வியாழக்கிழமை உள்ளூர் அணிகள் கலந்து கொண்ட கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார்.

அப்போது நிருபர்களிடம் அவர் கூறுகையில், "இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கருக்கு மத்திய அரசின் உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும்.

கிரிக்கெட் விளையாட்டு மூலம் இந்தியாவுக்கு பெரும் புகழையும், பெருமையையும் சம்பாதித்து கொடுத்து இந்தியாவை உலகின் உச்சத்துக்கு கொண்டு போய் சேர்த்த பெருமை டெண்டுல்கரை சாரும்.

அத்துடன், இன்றைய இளைஞர்கள் கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்டு விளையாடவும், பல கிரிக்கெட் வீரர்கள் உருவாகவும் உந்து சக்தியாக டெண்டுல்கர் விளங்குகிறார். அவரை தங்களது ரோல் மாடலாகவும், அவரை போல் சிறந்த கிரிக்கெட் வீரராக வரவேண்டும் என்றும் பல இளைஞர்கள் கனவு கண்டு வருகிறார்கள்.

ஆகவே இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வரும் அவருக்கு ஏன் பாரத் ரத்னா விருது கொடுத்து, கவுரவிக்கக் கூடாது?" என்று கேள்வி எழுப்பினார் ஹஜாரே.