Published:Updated:

அப்துல் கலாம் உடலுக்கு சச்சின் தெண்டுல்கர் கண்ணீர் அஞ்சலி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அப்துல் கலாம் உடலுக்கு சச்சின் தெண்டுல்கர் கண்ணீர் அஞ்சலி!
அப்துல் கலாம் உடலுக்கு சச்சின் தெண்டுல்கர் கண்ணீர் அஞ்சலி!

அப்துல் கலாம் உடலுக்கு சச்சின் தெண்டுல்கர் கண்ணீர் அஞ்சலி!

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமிற்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

அப்துல் கலாம் உடலுக்கு சச்சின் தெண்டுல்கர் கண்ணீர் அஞ்சலி!

ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம். நிறுவனத்தில் உரையாற்ற சென்ற குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம், மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். டெல்லியில் உள்ள அவரது வீட்டில் அப்துல் கலாமின்  உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் துணை தலைவர் ஹமித் அன்சாரி, பிரதமர் மோடி , காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் அப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்தினர்.

அப்துல் கலாம் மறைவையடுத்து கிரிக்கெட் வீரர்கள் பலரும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்திருந்தனர். அப்துல்கலாம் என்ற மகத்தான மனிதரை இழந்து நாடு கண்ணீர் சிந்துகிறது என்று ட்விட்டரில் இன்று காலை சச்சின் இரங்கல் தெரிவித்திருந்தார். பின்னர் மதியம்  டெல்லியில் அப்துல் கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு