Published:Updated:

நள்ளிரவில் டூட்டி நேரத்தில் கிரிக்கெட் : லேடி இன்ஸ்பெக்டர் பணிமாற்றம்!

Vikatan Correspondent

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பெண் இன்ஸ்பெக்டர் பணி நேரத்தில் யூனிபார்மில் கிரிக்கெட் விளையாடிய காட்சிகள் வாட்ஸ் அப்பில் வெளியானதையடுத்த, அவர் ஆயுதப்படைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் கோயிலுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், கோயிலில் ஒரு காவல்நிலையமும் உள்ளது. இங்கு அமுதச் செல்வி என்பவர் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி இரவு வேலை நேரத்தில் காவல்நிலையத்தின் முன்பு அமுதச் செல்வியும் மற்ற காவலர்களும் கிரிக்கெட் விளையாடிய வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப்பில் உலா வந்தது.

சுமார் 1 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோ, முதலில் போலீஸ்காரர் ஒருவர் பேட்டிங் செய்ய, இன்ஸ்பெக்டர் அமுதச் செல்வி பவுலிங் போடுவதும், அடுத்ததாக இன்ஸ்பெக்டர் அமுதச் செல்வி பேட்டிங் செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

நள்ளிரவில் டூட்டி நேரத்தில் கிரிக்கெட் : லேடி இன்ஸ்பெக்டர் பணிமாற்றம்!

இந்த வீடியோ காட்சிகள் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்திருக்கிறது. இதையடுத்து விசாரணை நடத்திய அதிகாரிகள், இன்ஸ்பெக்டர் அமுதச்செல்வியை ராமநாதபுரம் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டனர். பணியின்போது கிரிக்கெட் விளையாடிய மற்ற போலீசாரும் பல்வேறு இடங்களுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பணி நேரத்தில் யூனிபார்மில் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் கிரிக்கெட் விளையாடி, இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் ராமேஸ்வரம் போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.