Published:Updated:

பி.சி.சி.ஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா வீடு முற்றுகை!

Vikatan Correspondent
பி.சி.சி.ஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா வீடு முற்றுகை!
பி.சி.சி.ஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா வீடு முற்றுகை!

கொல்கத்தா : பி.சி.சி.ஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா வீட்டை முற்றுகையிட்டு பிகார் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பி.சி.சி.ஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா வீடு முற்றுகை!

கடந்த 14 ஆண்டுகளாக பிகார் கிரிக்கெட் சங்கத்துக்கு முழு உறுப்பினராக அங்கீகாரம் அளிக்க பி.சி.சி.ஐ மறுத்து வருகிறது. இதனால் பிகாரில் கிரிக்கெட் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வீரர்களின் முன்னேற்றத்துக்கும் தடை ஏற்பட்டுள்ளதாக கூறி, பிகார் கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கொல்கத்தா அலிபோர் சாலையில் உள்ள, பி.சி.சி.ஐ தலைவர் ஜக்மோகன் டால்மியாவின் வீட்டை முற்றுகையிட்டனர்.

 முற்று¬யீ குறித்து பிகார் கிரிக்கெட் வீரர்கள் சங்க தலைவர் மிர்துன்ஜே திவாரி கூறுகையில், '' இந்த போராட்டம் ஆரம்பம் கட்டமே. இதற்கு பின்னும் பிகார் கிரிக்கெட் சங்கத்துக்கு அங்கீகாரம் அளிக்கவில்லையெனில் மும்பையில் உள்ள பி.சி.சி.ஐ தலைமை அலுவலகத்துக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்துவோம். அந்த போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்பார்கள்'' என்றார்.

பி.சி.சி.ஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா வீடு முற்றுகை!

முற்றுகை போராட்டத்துக்கு பின் பிகார் கிரிக்கெட் சங்கத் தலைவர் மிர்துன்ஜே திவாரியை பி.சி.சி.ஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா தனியாக சந்தித்து பேசினார். அப்போது கடந்த 2008ஆம் ஆண்டு பிகார் கிரிக்கெட் சங்கத்துக்கு வழங்கப்பட்ட அசோசியேட் உறுப்பினர் அங்கீகாரத்துக்கு பதிலாக முழுநேர உறுப்பினருக்கான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டுமென மிர்துன்ஜே திவாரி அவரிடம்  வலியுறுத்தினார். விரைவில் உரிய முடிவெடுப்பதாக ஜக்மோகன் டால்மியா உறுதியளித்ததாக கூறப்படுகிறது.