Published:Updated:

வங்க தேசத்தின் ரன் மழையை நிஜமழை நிறுத்தியது...!

வங்க தேசத்தின் ரன் மழையை நிஜமழை நிறுத்தியது...!
வங்க தேசத்தின் ரன் மழையை நிஜமழை நிறுத்தியது...!

வங்க தேசத்தின் ரன் மழையை நிஜமழை நிறுத்தியது...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மிர்பூரில் நடந்து வரும் முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 16 ஓவர்களில் 119 ரன்களை எட்டியது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

வங்க தேசத்தின் ரன் மழையை நிஜமழை நிறுத்தியது...!

இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஃபாதுல்லாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி சமன் கண்டுள்ள நிலையில் இன்று முதல் ஒருநாள் போட்டி மிர்பூரில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் மோர்டசா முதலில் பேட் செய்ய முடிவு செய்தார்.

வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக தமிம் இக்பாலும் சவும்ய சர்க்காரும் களமிறங்கினர்.இதனால் 5 ஓவர்களில் 35 ரன்களை வங்கதேசம் எட்டியது.இந்திய அணியின் தொடக்க பந்துவீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் ஆகியோரால் தமிம் இக்பாலை கட்டுப்படுத்த முடியவில்லை. உமேஷ் யாதவின் ஒரே ஓவரில் தமிம் 3 பவுண்டரிகள் ஒரு சிக்சரை விளாசினார். இதனால் 7வது ஓவரில் வங்கதேச அணி 50 ரன்களை கடந்தது.

தொடர்ந்து தமிம், சர்க்கார் ஜோடி அதிரடியாக விளையாடியது. சர்க்கார் 38 பந்துகளிலும் தமிம் இக்பால் 50 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர்.சர்க்காரை செய்தார்.54 ரன்களில் சுரேஷ் ரெய்னா ரன் அவுட்
செய்தார்..தமிம் இக்பாலும் சவும்யா சர்க்காரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 102 ரன்களை குவித்தனர். ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக வங்கதேச தொடக்க வீரர்கள் 80 ரன்கள் சேர்த்ததை இதற்கு முன் அதிகபட்சம் ஆகும்.  

வங்க தேசத்தின் ரன் மழையை நிஜமழை நிறுத்தியது...!

தொடர்ந்து லிட்டன்தாஸ் தமிம் இக்பாலுடன் இணைந்தார். வங்கதேச அணி 16வது ஓவரில் 119 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டடது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு