Published:Updated:

350 ரன்கள் குவித்தும் முடியல...! இங்கிலாந்து சாதனை வெற்றி!!

350 ரன்கள்  குவித்தும் முடியல...! இங்கிலாந்து சாதனை வெற்றி!!
350 ரன்கள் குவித்தும் முடியல...! இங்கிலாந்து சாதனை வெற்றி!!

350 ரன்கள் குவித்தும் முடியல...! இங்கிலாந்து சாதனை வெற்றி!!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாட்டிங்ஹாம் நகரில், நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடந்த 4வது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 350 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி வீரர் வில்லியம்சனும் புதிய சாதனை படைத்தார்.

350 ரன்கள்  குவித்தும் முடியல...! இங்கிலாந்து சாதனை வெற்றி!!

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. தொடக்க வீரர்கள் குப்தில் 53 ரன்களும், மெக்கல்லம் 35 ரன்களும் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய வில்லியம்சன்- ராஸ் டெய்லர் ஜோடி இங்கிலாந்து பந்துவீச்சை துசம்சம் செய்தது. வில்லியம்சன் 70 பந்துகளில், 12 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 90 ரன்கள் குவித்தார். அதோடு ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 3 ஆயிரம் ரன்களை அடித்த நியூசிலாந்து வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். இதற்கு முன் நாதன் ஆஸ்லே, 93 இன்னிங்ஸ்களில் 3 ஆயிரம் ரன்களை அடித்திருந்தார். அந்த சாதனையை வில்லியம்சன் 73 இன்னிங்ஸ்களில், 3 ஆயிரம் ரன்களை கடந்தார். ராஸ் டெய்லர் 42 ரன்களும், எலியாட் 55 ரன்களும், சாட்னர் 44 ரன்களும் எடுத்தனர். 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 349 ரன்கள் குவித்தது.

350 ரன்கள்  குவித்தும் முடியல...! இங்கிலாந்து சாதனை வெற்றி!!

இதனையடுத்து 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான ஜேசன் ராயும் ஹேல்சும் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். ஜேசன் 38 ரன்களும் ஹேல்ஸ் 67 ரன்களும் அடித்தனர். அடுத்து ஜோடி சேர்ந்த ஜோ ருட், மோர்கன் ஜோடி நியூசிலாந்து பந்துவீச்சை பின்னி எடுத்தனர்.

350 ரன்கள்  குவித்தும் முடியல...! இங்கிலாந்து சாதனை வெற்றி!!

இதனால் இங்கிலாந்து அணியின் ரன் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. ஜோ ருட் 97 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் சதமடித்தார். மோர்கன் 82 பந்துகளில் 12 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 113 ரன்களை குவித்து அவுட் ஆனார். இந்த இரு வீரர்களின் அதிரடி காரணமாக 44 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி 350 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.இங்கிலாந்து அணி 300 ரன்களுக்க மேல் அடித்து சேஸ் செய்து பெற்ற முதல் வெற்றி இது.

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தற்போது இரு அணிகளும் தலா 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன.


 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு