Published:Updated:

இமாலய வெற்றி இலக்கை விரட்டி சென்று டக்வெர்த் லீவிசில் சிக்கிய இங்கிலாந்து!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஓவல்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், 399 ரன்கள் என்ற வெற்றி இலக்கை விரட்டிச் சென்று டக்வெர்த் லீவிஸ் விதியால் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியது.

 இமாலய வெற்றி இலக்கை விரட்டி சென்று டக்வெர்த் லீவிசில்  சிக்கிய  இங்கிலாந்து!

ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 398 ரன்கள் விளாசியது. தொடக்கவீரர்கள் குப்தில் 50 ரன்களையும், மெக்கல்லம் 39 ரன்களையும் எடுத்து நல்ல தொடக்கத்தை அளித்தனர்.

பின்னர் இணைந்த வில்லியம்சன் -  ராஸ்டெய்லர் ஜோடி,  இங்கிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தது. ராஸ் டெய்லர் 96 பந்துகளில், 10 பவுண்டரிகள் 4 சிக்சருடன் தனது 13-வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார்.  வில்லியம்சன் 88 பந்துகளில் 93 ரன்களை எடுத்ததார். 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 398 ரன்களை குவித்தது.

இதனையடுத்து இங்கிலாந்து அணி பேட் செய்யத் தொடங்கியது. தொடக்க வீரர்களின் பங்களிப்பு, இங்கிலாந்து அணியின் மத்திய கள வீரர்களுக்கு இமாலய இலக்கினை விரட்டுவதற்கு உதவியாக இருந்தது. தொடக்க வீரர்கள் ஜேன்சன் ராய் 39 ரன்களும், ஹேல்ஸ் 54 ரன்களும் எடுத்து வீழ்ந்தனர். அடுத்து மோர்கன் 88 ரன்களும், ஸ்டோக்ஸ் 28 ரன்களும், பட்லர் 41 ரன்களும் அதிவிரைவாக எடுத்தனர்.

 இமாலய வெற்றி இலக்கை விரட்டி சென்று டக்வெர்த் லீவிசில்  சிக்கிய  இங்கிலாந்து!

ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 37 பந்துகளில் 54 ரன்களே தேவைப்பட்டது. இந்த சமயத்தில் மழை குறுக்கிட்டது. 3 விக்கெட்டுகள் எஞ்சிய நிலையில் அடில் ரஷீத், லியாம் பிளங்கெட் ஆகியோர் களத்தில் இருந்தனர் .மழை நின்ற பிறகு டக்வெர்த் லீவிஸ் விதிப்படி, 13 பந்துகளில் 34 ரன்கள் என்று இலக்கு மாற்றப்பட்டது.

தொடர்ந்து ரஷீத், 26 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்தபோது  கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து பிளங்கெட் 44 ரன்களில் வெளியேறினார்.கடைசி 46-வது ஓவரை கிராண்ட் எலியட் வீசினார்.இந்த ஓவரில் வெற்றிக்கு 24 ரன்கள் தேவை என்ற நிலையில் இங்கிலாந்து அணியால் 365 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து அணி, 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 இமாலய வெற்றி இலக்கை விரட்டி சென்று டக்வெர்த் லீவிசில்  சிக்கிய  இங்கிலாந்து!

இதற்கு முன் கடந்த 2002 ஆம் ஆண்டு  லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டியில், இரு அணிகளும் சேர்ந்து 651 ரன்கள் எடுத்ததுதான் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மண்ணில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாக இருநதது. அந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா,  326 ரன்கள் எடுக்க இங்கிலாந்து 325 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

தற்போது இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இணைந்து ஒரே போட்டியில் 763 ரன்கள் எடுத்துள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு