Published:Updated:

போர்ப்ஸ் பட்டியலில் தோனி: 'பிச்சையெடுப்பார்' என்ற யோகராஜ் இனி என்ன சொல்வார்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

லகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில், யுவராஜ்சிங்கை சேர்க்காதற்கு தோனிதான் காரணம் என்று யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக இந்திய அணியின் கேப்டன் தோனியை பற்றி குறை கூறி வந்த யோகராஜ்சிங், ஒரு கட்டத்தில் தோனி பணமில்லாமல் பிச்சையெடுப்பார் என்றெல்லாம்  கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார்.

போர்ப்ஸ் பட்டியலில் தோனி: 'பிச்சையெடுப்பார்' என்ற யோகராஜ் இனி என்ன சொல்வார்?

யோகராஜ் இப்படியெல்லாம் சாபமிட்டாலும் தோனிக்கு பணவரவில் இதுவரை எந்த குறையும் இல்லை. இரு நாட்களுக்கு முன், உலகிலேயே விளையாட்டு மூலம் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலை  போர்ப்ஸ் இதழ்  வெளியிடப்பட்டது. இதில் தோனிக்கு 23வது இடம் கிடைத்துள்ளது.

கடந்த 12 மாதங்களில் மட்டும் தோனி 198 கோடி ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளார். இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள ஒரே கிரிக்கெட் வீரரும், இந்தியரும் தோனிதான்.இங்கிலாந்து கால்பந்து வீரர் வேயர்ன் ரூனி, டென்னிஸ் நட்சத்திரம் மரிய ஷரபோவா ஆகியோரை விட இந்திய கேப்டன் தோனிக்கு வருவாய் அதிகம்.

தோனி, போர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடிப்பது இது முதல்முறையல்ல. ஏற்கனவே கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் 210 கோடி ரூபாய் வருவாயுடன், தோனி 22வது இடத்தில் இருந்ததும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

ஆக தோனி பிச்சையெடுப்பார் என்று யோகராஜ்சிங் சாபமிட்டது பலிக்கவில்லை. இனிமேல் 'போர்ப்ஸ்' பிச்சையெடுக்கப் போகிறது என்று யோகராஜ்சிங் சாபமிட்டாலும் சாபமிடலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு