Published:Updated:

தீவிரவாதிகள் தாக்குதலால் மணிப்பூரை விட்டு வெளியேறுவேன் என்று சொல்லவில்லை- மேரி கோம் மறுப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ண்மையில் மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், "மணிப்பூரில் வாழவே பயமாக இருக்கிறது. இது போன்ற சம்வங்கள் தொடர்ந்தால் மணிப்பூரில் இருந்து வெளியேறிவிட திட்டமிட்டுள்ளேன்" என்று கூறியதாக தேசிய ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

தீவிரவாதிகள் தாக்குதலால் மணிப்பூரை விட்டு வெளியேறுவேன் என்று சொல்லவில்லை- மேரி கோம் மறுப்பு

மேரி கோம் வெளியிட்டதாக சொல்லப்பட்ட இந்த கருத்துக்கு மணிப்பூரில் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து,அந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள மேரி கோம், ''நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. மணிப்பூரை விட்டு வெளியேறப் போவதாக ஒரு போதும் சொல்லவில்லை. இது நான் பிறந்த மண். மணிப்பூரை சேர்ந்தவள், இந்தியர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்பவள் இது போன்ற பொறுப்பற்ற கருத்துக்களை ஒரு போதும் நான் வெளியிடுவதில்லை'' என்று தனது மறுப்பில் கூறியுள்ளார்.

மேரி கோம், கடந்த 2012ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 51 கிலோ எடை பிரிவுக்கான குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர். வடகிழக்கு மாநிலங்களின் முகமாக கருதப்படுபவர். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு