Published:Updated:

யூரோ2016 : பெல்ஜியத்தை வீழ்த்தியது வேல்ஸ் ; கோபா அமெரிக்காவில் மெக்சிகோவுக்கு ஏமாற்றம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ரும் 2016ஆம் ஆண்டுக்கான யூரோ தகுதி சுற்றுப் போட்டியில், உலக தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள பெல்ஜியம் அணியை வேல்ஸ் அணி வீழ்த்தியது. கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் மெக்சிகோ- பொலிவியா ஆட்டம் கோல் எதுவுமின்றி சமனில் முடிந்தது.

யூரோ2016  : பெல்ஜியத்தை வீழ்த்தியது வேல்ஸ் ; கோபா அமெரிக்காவில் மெக்சிகோவுக்கு ஏமாற்றம்!

வரும் 2016ஆம் ஆண்டு ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி, பிரான்சில் நடைபெறவுள்ளது. இதற்காக தகுதி சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. இதில் 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ள வேல்ஸ் அணி, உலக தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள பெல்ஜியம் அணியுடன், நேற்று கார்டிஃப் நகரில் பலப்பரீட்சையில் ஈடுபட்டது. இந்த போட்டியில் 25வது நிமிடத்தில் ரியல்மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் காரத் பேல், அற்புதமான முறையில் கோல் அடித்தார். இதன் மூலம் வேல்ஸ் அணி முன்னிலை பெற்றது.

யூரோ2016  : பெல்ஜியத்தை வீழ்த்தியது வேல்ஸ் ; கோபா அமெரிக்காவில் மெக்சிகோவுக்கு ஏமாற்றம்!

மேற்கொண்டு கோல் அடிக்க பெல்ஜியம் அணி எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் வேல்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3 புள்ளிகளை ஈட்டியது. தற்போது 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள வேல்ஸ் அணி, 14 புள்ளிகளை ஈட்டியுள்ளது. பெல்ஜியம் அணி 11 புள்ளிகளை பெற்றுள்ளது. இன்னும் 4 ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில், வேல்ஸ் அணி யூரோ 2016 போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. கடந்த 1958ஆம் ஆண்டுக்கு பிறகு ஐரோப்பிய கோப்பை, உலகக் கோப்பை உள்ளிட்ட முக்கியமான கால்பந்து தொடர்களில் பங்கேற்கும் வாய்ப்பை வேல்ஸ் அணி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யூரோ2016  : பெல்ஜியத்தை வீழ்த்தியது வேல்ஸ் ; கோபா அமெரிக்காவில் மெக்சிகோவுக்கு ஏமாற்றம்!

நேற்று நடந்த பிற ஆட்டங்களில் நெதர்லாந்து லாத்வியா அணியை 2 கோல் அடித்து வீழ்த்தியது. ஐஸ்லாந்து செக்குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடிக்க இத்தாலி- குரோஷியா ஆட்டம் 1-1 என்று சமனில் முடிவுற்றது. நார்வே - அஜர்பெஜான் ஆட்டம் கோல் இல்லாமல் சமன் கண்டது.

யூரோ2016  : பெல்ஜியத்தை வீழ்த்தியது வேல்ஸ் ; கோபா அமெரிக்காவில் மெக்சிகோவுக்கு ஏமாற்றம்!

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் 'ஏ' பிரிவில் இன்று காலை நடந்த ஆட்டத்தில் மெக்சிகோ - பொலிவியா அணிகள் மோதின . 90 நிமிட ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இறுதியில் கோல் எதுவுமின்றி ஆட்டம் சமனில் முடிந்ததால் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
 
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு