Published:Updated:

'கேப்டன்' கோலிக்கு காத்திருக்கும் சவால்கள்!

'கேப்டன்'  கோலிக்கு காத்திருக்கும் சவால்கள்!
'கேப்டன்' கோலிக்கு காத்திருக்கும் சவால்கள்!

'கேப்டன்' கோலிக்கு காத்திருக்கும் சவால்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'கேப்டன்'  கோலிக்கு காத்திருக்கும் சவால்கள்!

ந்தியாவின் கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் தொடர் ஒன்றுக்கு கேப்டனாக பணியாற்றியவர் என்ற பட்டியலில் இடம் பிடித்து விட்டார் விராட் கோலி.

இருபத்தி ஆறு வயதில் சுமார் 33 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ள விராட் கோலிக்கு,  ஒரு டெஸ்ட்  தொடருக்கான கேப்டன் பதவி கிடைப்பது சாதாரண விஷயம் கிடையாது.

தற்போதைய அணியில் கேப்டனாகும் தகுதி கோலிக்கு நிறையவே இருக்கிறது. பெரும்பாலானவர்கள் விராட் கோலியின் ஆக்ரோஷ மனப்பான்மை காரணமாக, அவர் கேப்டன் பதவிக்கு தகுதியானவர் அல்ல என விமர்சிக்கின்றனர்.

தோனியை பொறுத்தவரை மென்மையான அணுகுமுறையை கடைபிடிப்பவர், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற மனப்பான்மையை தவிர்த்து, தோல்வி அடையக்கூடாது அல்லது தோல்வியை தள்ளிப்போடவேண்டும் என்ற மனநிலையை கொண்டிருப்பவர். இதனாலேயே அயல் நாடுகளில் இந்திய அணி வெற்றி, தோல்வியை பற்றி கவலைப்படாமல் ஆக்ரோஷ பாணி உத்திகளை கடைபிடிக்கவே இல்லை, இவைதான் வாஷ் அவுட் போன்ற மோசமான தோல்விக்கு வித்திட்டது.

தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் எப்போதுமே ஆக்ரோஷமாக விளையாடுவார்கள், ஆஸ்திரேலிய வீரர்கள் ஆட்டத்தில் மட்டுமின்றி சொற்போரிலும் ஆக்ரோஷம் காண்பிப்பார்கள். ஆனால், தென்னாப்பிரிக்கா வீரர்கள் ஆட்டத்தில் மட்டும் ஆக்ரோஷம் காண்பிப்பார்கள். இந்த இரண்டு அணியினரையும் டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்துவது என்பது எந்தவொரு அணிக்கும் குதிரைகொம்புதான்.

விராட் கோலியின் திட்டம் என்பது இந்தியாவை தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணியாக மாற்றிக்காட்டுவது என்பதே. கங்குலியும், தோனியும் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டார்கள். ஆனால், விராட் கோலி இந்தியாவை உச்சாணிக் கொம்பில் உட்காரவைக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். இதனை விராட் வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார். "களத்தில் வெற்றிக்காகவே விளையாடவேண்டும். அணியில் ஒருவர் சதமடித்து அணி தோற்றுவிட்டால் சதத்துக்கு பயன் இல்லை" என்ற வார்த்தைகள் மூலம் தனது  திட்டத்தை சூசகமாக தெரிவித்து விட்டார்.

இதுவரை விராட் கோலி கேப்டனாக இருந்த போட்டிகளை கவனித்தவர்களுக்கு ஒன்று நிச்சயம் புரியும். அது நல்ல உடற்தகுதியுடன், முழு திறனையும் விளையாட்டில் காண்பிப்பவர்களுக்கு மட்டுமே அணியில் இடம் உண்டு, சொதப்பினால் அவர்களுக்கு கல்தா என்பதே. தோனியிடம் கற்றுக்கொண்ட உத்திகளை வைத்து கொண்டு கங்குலி போல தைரியமாக முடிவு எடுப்பவராக கோலி தென்படுகிறார்.

இப்போது 26 வயதுதான் ஆகிறது, விராட் நன்றாக செயல்பட்டால் குறைந்தது 5-6 ஆண்டுகளுக்கு கேப்டனாக செயல்பட முடியும். பொதுவாக இந்திய அணியில் கடந்த 15 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் கேப்டனாக இருந்தவர்கள், அந்த சமயங்களில் டெஸ்ட் போட்டிகளில் தனிப்பட்ட ஆட்டத்திறனில் சோடை போயிருக்கிறார்கள், இந்த லிஸ்டில் சச்சின் முதல் தோனி வரை அனைவரையுமே சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், விராட் கேப்டனாக பதவியேற்ற முதல் மூன்று இன்னிங்சிலும் சதம் அடித்து சாதனை படைத்திருக்கிறார்.

"எல்லாமே இனிமே நல்லாத்தான் நடக்கும், பட்டாசும் சும்மாவே கொளுத்தாமதான் வெடிக்கும்" என ஸ்டேட்டஸ் தட்டும் கோலி, ரசிகர்களின் நம்பிக்கையை கண்டிப்பாக காப்பாற்றுவார் என்றே எதிர்பார்க்கலாம்.

கங்க்ராட்ஸ் கோலி.

கோலி முன் இருக்கும் ஐந்து சவால்கள்...

1. அனுஷ்கா ஷர்மா சர்ச்சையை தவிர்க்க வேண்டும். மற்ற இடங்களில் எப்படி இருந்தாலும் மைதானத்துக்குள் இருந்து கொண்டு ஹீரோயிசம் காண்பிப்பதை தவிர்க்க வேண்டும். கிரிக்கெட் விளையாடும் 22 கிரிக்கெட் வீரர்களும், தங்களது காதலி முன் சாகசம் செய்ய நினைத்தால் நன்றாகவா இருக்கும்?

2. அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை இந்தியாவுக்கு ஆசியாவை தாண்டி சுற்றுப்பயணம் இல்லை. இந்தியாவில் பந்துகள் எகிறாது என்பதால் இதுவரை தோல்வியில் தத்தளித்த இந்திய அணிக்கு இனி உற்சாகம்தான். எனினும், அடுத்தடுத்த ஆண்டுகளில் நடக்கும் தொடர்களை கருத்தில் கொண்டு இந்தியாவில் வேகபந்துக்கு சாதகமான ஆடுகளங்களை உருவாக்கவும், வீரர்கள் வேகப்பந்தை சமாளிக்கும் திறனை வளர்த்துகொள்ளவும் கோலி பி.சி.சி.ஐ. மூலம் முயற்சிக்க வேண்டும்.

3. சிறந்த வேகபந்து வீச்சாளர்களை உருவாக்குவது அவசியம். இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா தொடர்களில் இந்திய அணி எதிரணியின் பத்து விக்கெட்டுகளை வீழ்த்த பிரம்ம பிரயத்தனம் செய்ததை கருத்தில் கொண்டு தொலைநோக்கு பார்வையில் வீரர்களை வளர்த்தெடுக்க வேண்டும்.

4. இந்திய அணிக்கு வரும் நான்காண்டுகள் முக்கியமான கால கட்டம், தோல்வியில் இருந்து மீள்வது மட்டுமின்றி வலுவான அணியாகவும் மாறுவது அவசியம். அதற்கு கோலி முழு பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

5. சீனியர்களை ஒதுக்குவது போன்ற செயல்களில் ஈடுபடாமல் திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். தனது சொல்பேச்சை வேதவாக்காக எடுத்துகொள்பவர்கள் மட்டுமே அணியில் இருக்கவேண்டும் என சர்வாதிகார மனநிலைக்கு செல்லக்கூடாது.

-பு.விவேக் ஆனந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு