Published:Updated:

காதலியை கொன்ற வழக்கு : சிறையில் இருந்து வெளிவருகிறார் தடகள வீரர் பிஸ்டோரியஸ்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காதலியை கொன்ற வழக்கு : சிறையில் இருந்து வெளிவருகிறார் தடகள வீரர் பிஸ்டோரியஸ்!

காதலியை கொலை செய்த வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பிரபல தென்ஆப்ரிக்க மாற்றுத்திறனாளி ஓட்டப்பந்தய வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ், பரோலில் விடுதலை செய்யப்படவிருக்கிறார்.

கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 14ம் ஆம் தேதி, தென்ஆப்ரிக்காவில் பிரிட்டோரியா நகரில் உள்ள பிஸ்டோரியஸ் வீட்டில், அவரது காதலி ரீவா ஸ்டீன்கேம்ப் மர்மமமான முறையில் இறந்து கிடந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பிஸ்டோரியஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற விசாரணையில், வீட்டுக்குள் திருடன் புகுந்துவிவிட்டதாக நினைத்து துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில் ரீவா சிக்கிக் கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும் தனது காதலியை திட்டமிட்டு கொலை செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி, பிரிட்டோரியா உயர் நீதிமன்றம் அவருக்கு 5 வருடம் சிறைத் தண்டனை வழங்கியது. தற்போது சிறைதண்டனை அனுபவித்து வரும் அவர், ஆகஸ்ட் மாதம் பரோலில் வெளிவர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிஸ்டோரியசுக்கு எதிரான வழக்கை அந்நாட்டு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. நவம்பரில் நடைபெறவுள்ள மேல்முறையீடு விசாரணையில் கொலை செய்தது நிரூபணமானால் பிஸ்டோரியசுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு