Published:Updated:

வறுமையில் வாடும் ஹாக்கி வீரர்களுக்கு சம்பளம் கொடுக்காத தோனி, சுரேஷ் ரெய்னா!

வறுமையில் வாடும் ஹாக்கி வீரர்களுக்கு சம்பளம் கொடுக்காத தோனி, சுரேஷ் ரெய்னா!
வறுமையில் வாடும் ஹாக்கி வீரர்களுக்கு சம்பளம் கொடுக்காத தோனி, சுரேஷ் ரெய்னா!

வறுமையில் வாடும் ஹாக்கி வீரர்களுக்கு சம்பளம் கொடுக்காத தோனி, சுரேஷ் ரெய்னா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கிரிக்கெட் வீரர்கள் தோனி, சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு சொந்தமான ஹாக்கி அணிகளுக்காக விளையாடி வரும் வீரர்களுக்கு பல கோடி ரூபாய் சம்பள பாக்கி வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. 

வறுமையில் வாடும் ஹாக்கி வீரர்களுக்கு சம்பளம் கொடுக்காத தோனி, சுரேஷ் ரெய்னா!

ஹாக்கி இந்தியா லீக் தொடரில் விளையாடி வரும் ராஞ்சி ரேஸ் அணி, சகாரா ஸ்போர்ட்டிங் அட்வென்ச்சர் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி ஆகியோருக்கு சொந்தமானது. அதே போல் உத்தரபிரதேச விசார்ட்ஸ் அணிக்கு, மற்றொரு கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா பங்குதாரர்.

இந்நிலையில் கடந்த சீசனில் ஹாக்கி இந்தியா லீக் தொடரில் விளையாடிய இந்த அணி வீரர்களுக்கு சம்பளப் பாக்கி வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த அணிகளுக்காக விளையாடி வரும் வீரர்களுக்கு 2 முதல் 3 கோடி ரூபாய் வரை இன்னமும் சம்பளம் கொடுக்க வேண்டியதுள்ளதாம். அதேபோல் பயிற்சியாளர்கள், சப்போர்ட்டிங் ஸ்டாஃப்களுக்கும் சம்பள பாக்கி வைக்கப்பட்டுள்ளதாம்.

ஆனால் சம்பள பாக்கி குறித்து பேச ஹாக்கி வீரர்களுக்கு தைரியம் இல்லை. வறுமையில் இருந்த அவர்களுக்கு விளையாட வாய்ப்பு கிடைப்பதே பெரிய விஷயம் என்பதால், வாய் திறந்து கேட்க மறுக்கின்றனர். அப்படி கேட்டால் அணியில் இருந்து நீக்கி விட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்தில் அமைதி காக்கின்றனர். 

தற்போது இந்திய ஹாக்கி அணியின் மேலாளராக உள்ள ரோலண்ட் ஒல்ட்மென், கடந்த சீசனில் சுரேஷ் ரெய்னாவின் உத்தரபிரதேச விசார்ட்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருந்தவர். அவர் சம்பளபாக்கி குறித்து கூறுகையில், தனக்கு சம்பள பாக்கியுள்ளது என்றும், ஆனால் அது குறித்து தான் கவலைப்படவில்லை என்றும், எப்போதாவது தருவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

'ஹாக்கி இந்தியா' அமைப்பின் செயலாளர் நரீந்தர பத்ரா, இது குறித்து எழுத்துப்பூர்வமாக புகார் வந்தால் ஹாக்கி இந்தியா அமைப்பு பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கும் என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு