Published:Updated:

சோகங்களை கடந்து வாசிம் அக்ரம் முகத்தில் மீண்டும் சிரிப்பு...!

சோகங்களை கடந்து வாசிம் அக்ரம் முகத்தில் மீண்டும் சிரிப்பு...!
சோகங்களை கடந்து வாசிம் அக்ரம் முகத்தில் மீண்டும் சிரிப்பு...!

சோகங்களை கடந்து வாசிம் அக்ரம் முகத்தில் மீண்டும் சிரிப்பு...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ராச்சியில் நடைபெற்ற ஃபேஷன் பேரேடில்  வாசிம் அக்ரம் அவரது மனைவி ஷெனிரா ஆகியோர் பங்கேற்றனர்.

சோகங்களை கடந்து வாசிம் அக்ரம் முகத்தில் மீண்டும் சிரிப்பு...!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் சொந்த வாழ்க்கையில் பல சோகங்களை சந்தித்தவர். கிரிக்கெட்டில் உச்சத்தில் இருக்கும் போது, அதாவது அக்ரமின் 30வது வயதில் அவருக்கு சர்க்கரை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் முறையான உடற்பயிற்சி மூலம் சர்க்கரை நோயையும் வென்று கிரிக்கெட்டில் சாதித்தார். இத்தனைக்கும் அவரது குடும்பத்தில் யாருக்கும் சர்க்கரை நோய் இருந்தது கிடையாது.

கடந்த 1995ஆம் ஆண்டு ஹீயூமா என்பவரை வாசிம் அக்ரம் திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு 2 ஆண் குழந்தைகள் உண்டு. இந்நிலையில் ஹியூமாவை புற்றுநோய் தாக்கியது. இவரை காப்பாற்ற வாசிம் அக்ரம் கடும் முயற்சி மேற்கொண்டார். எனினும் காப்பாற்ற முடியவில்லை. கடந்த 2009ஆம் ஆண்டு சென்னை அப்பலோ மருத்துவமனையில்தான் ஹியூமாவின் உயிர் பிரிந்தது. 

சோகங்களை கடந்து வாசிம் அக்ரம் முகத்தில் மீண்டும் சிரிப்பு...!

அதற்கு பின் 4 ஆண்டுகளாக வாசிம் அக்ரம் மறுமணம் புரிந்து கொள்ளவில்லை. குழந்தைகளையும் அவரே வளர்த்து வந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷெனிரா தாம்ப்சனுடன் காதல் ஏற்பட்டு பின்னர் அவரை கடந்த 2013ஆம் ஆண்டு வாசிம் அக்ரம் திருமணம் செய்தார்.. எனக்காக மட்டுமில்லையென்றாலும் எனது குழந்தைகளுக்காக மறுமணம் அவசியம் என்று வாசிம் அக்ரம் தெரிவித்திருந்தார்.

ஓய்வுக்கு பின் கிரிக்கெட் வர்ணணையாளளராக பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றி வந்த அவர், பேஷன் பேரேடுகளில் பங்கேற்பதிலும் ஆர்வம்  கொண்டிருந்தார்.  கடந்த 2011ஆம் ஆண்டு முதல் ஃபேஷன் பேரேடுகளில் பங்கேற்று  வந்த அக்ரம் நேற்று கராச்சியில் தனது மனைவியுடன் ஃபேஷன் பேரேடில் கலந்து கொண்டார்.

கராச்சி நகரில் நேற்று நடந்த பிரிடல் ஃபேஷன் பரேடில் வாசிம் அக்ரம் அவரது மனைவி ஷெனிரா ஆகியோர் பாகிஸ்தானின் பாரம்பரிய உடையில் வலம் வந்த புகைப்படம் இணையதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு