Published:Updated:

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாதுகாப்பு கருதி வங்கதேசத்தில் மதரசா மூடல்!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாதுகாப்பு கருதி வங்கதேசத்தில் மதரசா மூடல்!
இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாதுகாப்பு கருதி வங்கதேசத்தில் மதரசா மூடல்!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாதுகாப்பு கருதி வங்கதேசத்தில் மதரசா மூடல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டாக்கா: இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் டெஸ்ட் டெஸ்ட் போட்டி நாளை மிர்பூரில் தொடங்குவதை முன்னிட்டு வங்கதேச அதிகாரிகள் இந்திய வீரர்களின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாதுகாப்பு கருதி வங்கதேசத்தில் மதரசா மூடல்!

இதன் ஒரு பகுதியாக மிர்பூர் ஃபாதுல்லா கிரிக்கெட் மைதானம் அருகே செயல்பட்டு வந்த மதரசா என்ற இஸ்லாமிய மத போதனைகள் வழங்கும் மையத்தை தற்காலிகமாக வங்கதேச அதிகாரிகள் மூடியுள்ளனர்.

இது குறித்து மதரசா நிர்வாகியான மவுலான அப்துல் சக்கூர், ''கிரிக்கெட் போட்டி நடைபெறுவதையொட்டி தற்காலிகமாக இந்த மதராசாவை  மூடுமாறு பாதுபாப்பு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர். மதராசாவுக்கு அரசே இது போன்ற வேண்டுகோள் விடுத்திருப்பதால் மூடுவது அவசியமாகிறது. இதனால் இங்கு தங்கியிருந்த மாணவர்களுக்கு நாளை முதல் 5 நாட்கள் விடுமுறை அளித்து விட்டோம். பெற்றோர் இல்லாத அனாதரவான 25 பேரை மட்டும் எங்களுடன் வைத்துக் கொள்ள அனுமதி கேட்டுள்ளோம்'' என்றார்.

ஃபாதுல்லா மைதானத்தில் இதற்கு முன் கடந்த 2006ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய-வங்கதேச அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி கடைசியாக நடைபெற்றது. 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் அங்கு டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இதனால் கூடுதல் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த உலகக் கோப்பை போட்டியின்போது இந்திய அணியிடம் வங்சதேச அணி தோற்றது சர்ச்சையை கிளப்பியிருந்தது. இதனால் மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் சர்ச்சையை உருவாக்கும்விதத்தில் பேனர்களை கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் டாக்காவில் இஸ்லாமிய மதத்துக்கு எதிராக இணையத்தில் கருத்து வெளியிட்டவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக மதரசாக்களில் படித்து வந்த இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பிறகு வங்கதேச அரசு மதராசாக்களை தீவிரமாக கண்காணித்து வருவது கவனத்தில் கொள்ளத்தக்கது.


 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு