Published:Updated:

டென்னிஸ் நட்சத்திரம் லீ நாவுக்கு பெண் குழந்தை!

 டென்னிஸ் நட்சத்திரம் லீ நாவுக்கு பெண் குழந்தை!
டென்னிஸ் நட்சத்திரம் லீ நாவுக்கு பெண் குழந்தை!

டென்னிஸ் நட்சத்திரம் லீ நாவுக்கு பெண் குழந்தை!

 டென்னிஸ் நட்சத்திரம் லீ நாவுக்கு பெண் குழந்தை!

பிரபல டென்னிஸ் நட்சத்திரம் லீ நாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

சீனாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை லீ நா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திடீரென்று டென்னிசுக்கு முழுக்கு போட்டார்.

கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற லீ நா, தான் கர்ப்பமாக இருப்பதாக ரசிகர்கள் முன்னிலையில் அறிவித்தார்.

இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை 2.25 மணிக்கு தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக லீ நா ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 

இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ட்விட்டரில் லீ நா இந்த செய்தியை பதிவிட்ட 5 மணி நேரத்துக்கு 15 ஆயிரம் காமென்ட்கள் குவிந்தன. 19 ஆயிரம் முறை ரீட்விட் செய்யப்பட்டுள்ளது.

டென்னிஸ் வாழ்க்கையில் ஆஸ்திரேலிய ஓபன், ஃபிரெஞ்சு ஓபன் உள்ளிட்ட 9 பட்டங்களை 33 வயது லீ நா வென்றுள்ளார். இவரது கணவர் ஜியாங் ஷான் ஆவார்.
 

அடுத்த கட்டுரைக்கு