Published:Updated:

முத்தையா முரளிதரன் மண்ணில் 128 பந்துவீச்சாளர்களுக்குத் தடை

முத்தையா முரளிதரன் மண்ணில் 128 பந்துவீச்சாளர்களுக்குத் தடை
முத்தையா முரளிதரன் மண்ணில் 128 பந்துவீச்சாளர்களுக்குத் தடை

முத்தையா முரளிதரன் மண்ணில் 128 பந்துவீச்சாளர்களுக்குத் தடை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விதிமுறைகளுக்கு புறம்பாக பந்துவீசியதாக அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட 128 பந்துவீச்சாளர்களுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

முத்தையா முரளிதரன் மண்ணில் 128 பந்துவீச்சாளர்களுக்குத் தடை

இது தொடர்பாக ஐ.சி.சி.க்கும் இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்குமிடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, விதிகளுக்கு மாறாக பந்துவீசுபவர்களை உள்ளுருரிலேயே அடையாளம் காணும் பணி நடைபெற்றது. கடந்த 2014-15 ஆண்டுகளில் இலங்கை உள்ளுர் கிரிக்கெட் அளவில் 170 பந்துவீச்சாளர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு அவர்களது பந்துவீச்சு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.


இதில் 42 பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு முறை சரியாக இருந்ததால் அவர்கள் தடையில் இருந்து தப்பினர். விதிகளுக்கு முரணாக பந்துவீசிய 128 பந்துவீச்சாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதத்தில் பாகிஸ்தானில் 16 வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. முன்னாள் நம்பர் ஓன் பந்துவீச்சாளர் சயீத் அஜ்மலும் கூட இது போன்ற குற்றச்சாட்டுக்குள்ளானார். இதனால் அவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெறவில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு