Published:Updated:

ஃபிஃபா தலைவரை சிக்க வைத்த அந்த கடிதம்...!

ஃபிஃபா தலைவரை சிக்க வைத்த அந்த கடிதம்...!
ஃபிஃபா தலைவரை சிக்க வைத்த அந்த கடிதம்...!

ஃபிஃபா தலைவரை சிக்க வைத்த அந்த கடிதம்...!

சுமார் 40 ஆண்டு காலம் ஃபிஃபாவுக்கும் ஜோசப் பிளேட்டருக்கும் தொடர்பு உண்டு. 1975ஆம் ஆண்டு முதல் ஜோசப் பிளேட்டர் ஃபிஃபாவில் பணியாற்றி வருகிறார்.

ஃபிஃபா தலைவரை சிக்க வைத்த அந்த கடிதம்...!

முதலில் டெக்னிக்கல் டைரக்டாக இருந்த ஜோசப் பிளேட்டர் 1981 முதல் 1998ஆம் ஆண்டு வரை ஃபிஃபா பொதுச் செயலாளராக இருந்தார். பின்னர் 1998ஆம் ஆண்டு ஃபிஃபா தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த பதவி 4 ஆண்டுகளுக்கானது. அதற்கு பின் 2002 முதல் 2015ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 5 முறை ஃபிஃபா தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.

ஃபிஃபா தலைவரை சிக்க வைத்த அந்த கடிதம்...!

இவருடைய இந்த 17 ஆண்டு கால தலைமையின் கீழ்தான் ஃபிஃபாவில் அதிகபட்ச அளவில் நிதிமுறைகேடு நடந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஃபிஃபா தலைவர் பதவியில் இருந்து ஜோசப் பிளேட்டர் ராஜினாமா செய்ய முக்கிய காரணமாக இருந்தது, கடந்த 2010ஆம் ஆண்டு தென்ஆப்ரிக்கா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை பெறுவதற்காக 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியதாக ஒப்புக் கொண்டதுதான்.

ஃபிஃபா தலைவரை சிக்க வைத்த அந்த கடிதம்...!

இந்த தொகை பின்னர் வட,மத்திய மற்றும் கரீபியன் கால்பந்து கூட்டமைப்புக்கு வழங்ப்பட்டுள்ளது. அப்போது வடமத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்து கூட்டமைக்கின் தலைவராக இருந்த ஜேக் வார்னர் பின்னர் இந்த தொகையை தனது சொந்த வங்கி கணக்குக்கு மாற்றிக் கொண்டார். கடந்த  2011ஆம் ஆண்டு ஜேக் வார்னர் ஃபிஃபா அமைப்பில் இருந்து விலகினார்.

இது தொடர்பாக தென் ஆப்ரிக்க கால்பந்து சங்கம் எழுதிய ஒரு கடிதம்தான் தற்போது ஃபிஃபா தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வைத்துள்ளது. தென்ஆப்ரிக்கா வழங்கிய இந்த நிதி தொடர்பாக கடந்த 2008ஆம் ஆண்டு அப்போதைய தென்ஆப்ரிக்க கால்பந்து சங்கத் தலைவர் ஃபிஃபா செயலாளர் ஜெரோம் வால்கிக்கு எழுதிய கடிதத்தில் வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கூட்டமைப்புக்கு உள்பட்ட பகுதிகளில் கால்பந்து வளர்ச்சிக்காக 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்த தொகையை அந்த அமைப்புக்கு மாற்றி அனுப்பி விடுமாறும் கூறப்பட்டிருந்தது. இந்த கடிதம்தான் இப்போது முக்கிய ஆதாரமாக இருக்கிறது-.

ஆனால் இந்த கடிதம் ஃபிஃபா பொதுச்செயலாளர் ஜெரோம் வால்கி பெயருக்கு எழுதப்பட்டிருப்பதால், அவருக்கு தெரியாமல் இந்த பணபரிவர்த்தனைகள் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று நம்பப்படுகிறது. எனினும் ஃபிஃபாவை பொறுத்த வரை, நிதிக்குழு தலைவரின் கட்டுப்பாட்டில்தான் இயங்கி வருகிறது. இந்த பணவரிவர்த்தை நடந்த காலத்தில் ஃபிஃபா நிதிக்குழு தலைவராக இருந்தவர் ஜுலியோ கிரானாடா. இவரும் ஜோசப் பிளேட்டரை போன்றே 26 ஆண்டு காலம் ஃபிஃபாவில் பல்வேறு பணிகளில் இருந்தவர். பிளேட்டரின் நெருங்கிய நண்பரும் கூட. கடந்த 2014ஆம் ஆண்டு ஜுலியோ கிரானடோ இறந்து போய் விட்டது குறிப்பிடத்தக்கது.இது தொடர்பாக அமெரிக்க எப்.பி.ஐ-யின் விசாரணை வட்டத்துக்குள் ஜோசப் பிளேட்டர் இருப்பது உறுதியானது.

இன்டர்போல் அமைப்பும் ஃபிஃபா நிர்வாகிகள் 6 பேருக்கு சிவப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது. இதில் இரண்டு போர் ஃபிஃபா துணைத் தலைவர்கள் பதவியில் இருந்தவர்கள் என்றுத் தெரிகிறது. அப்படி சிவப்பு நோட்டீஸ் விநியோகிக்கப்படும் போது, அவர்கள் சர்வதேச நாடுகளால் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இணைந்துவிடுவார்கள்.இதற்கு பின்னரே ஜோசப் பிளேட்டர்,ராஜினாமா செய்யும் முடிவை எடுத்துள்ளார்

ஃபிஃபா தலைவரை சிக்க வைத்த அந்த கடிதம்...!

நேற்று தனது ராஜினாமா குறித்த செய்தியாளர்களின் சந்திப்பின் போது, ஜோசப் பிளேட்டர் அடுத்த ஃபிஃபா காங்கிரஸ் கூடும் தேதி குறித்து அறிவிக்கவில்லை. அடுத்த தலைவர் தேர்வு செய்யப்படும் வரை தற்காலிகத் தலைவராக ஜோசப் பிளேட்டர்தான் செயல்படுவார். மே 26ஆம் தேதி ஃபிஃபா சாதாரணப் பொதுக்குழு கூடுகிறது. ஒரு வேளை தேர்தல் நடத்தப்படுவதாக இருந்தால் அதற்கு முன் அசாதாரண பொதுக்குழு கூடும்.

பிரான்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய யூஃபா தலைவருமான மைக்கேல் பிளாட்டினி அடுத்த தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் எனத் தெரிகிறது. அதே வேளையில் ஃஜோசப் பிளேட்டரை எதிர்த்து போட்டியிட்ட ஜோர்டான் இளவரசர் அல் ஹசனும் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது. ஆனால் அல் ஹசனை விட மைக்கேல் பிளாட்டினிதான் ஃபிஃபா தலைவராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பிருக்கிறது.




 

அடுத்த கட்டுரைக்கு