Published:Updated:

நம்ம சென்னையில் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடக்க விழா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
 நம்ம சென்னையில் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடக்க விழா!
நம்ம சென்னையில் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடக்க விழா!

நம்ம சென்னையில் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடக்க விழா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை: ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் 2வது சீசன், அக்டோபர் 3ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. சென்னை நேரு விளையாட்டரங்கில் கண்கவரும் தொடக்கவிழா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

 நம்ம சென்னையில் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடக்க விழா!

சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர், கடந்த ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்டு பெரும் வரவேற்பு பெற்றது. அலெசான்ட்ரோ டெல்பியரோ, மார்கோ மாட்டரசி, நிகோலஸ் அனால்கோ, ராபர்ட் பைர்ஸ், இலானா பூளுமர் என நட்சத்திர வீரர்கள் பங்கேற்ற இந்த தொடரில், கடந்த ஆண்டு அத்லெடிகோ டி கொல்கத்தா அணி கோப்பையை வென்றது.

நடப்புத் தொடருக்காக, ஐரோப்பிய லீக்குகளில் இருந்து ஓய்வு பெற்ற சில புகழ்பெற்ற வீரர்களை ஒப்பந்தம் செய்ய, ஐ.எஸ்.எல். அணிகள் முயற்சித்து வருகின்றன. டெல்லி டைனமோஸ் அணி,  பார்சிலோனா அணியின் முன்னாள் கேப்டன் கார்லெஸ் புயாலை ஒப்பந்தம் செய்ய முயற்சித்து வருவது இதில் குறிப்பிடத்தக்கது.

 நம்ம சென்னையில் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடக்க விழா!

இந்நிலையில் வரும் சீசனுக்கான ஐ.எஸ்.எல். தொடரின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. நடப்புத் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி,  நடப்புச் சாம்பியன் அத்லெடிகோ டி கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. இதனால் இந்த முறை தொடக்க விழா நிகழ்ச்சிகளும் சென்னை நேரு விளையாட்டரங்கத்தில்தான் நடைபெறவுள்ளது. அக்டோபர் 3ஆம் தேதி நடைபெறவுள்ள தொடக்க விழா நிகழ்ச்சியில் பாலிவுட் , கோலிவுட் நட்சத்திரங்களின் நடன நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. கண்கவரும் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. கலை நிகழ்ச்சிகள் முடிந்தபின், சென்னையின் எப்.சி. -  கொல்கத்தா அணிகள் மோதும் போட்டி நடைபெறுகிறது.

நடப்புத் தொடரில் மொத்த 61 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஹோம், அவே முறையில் லீக் சுற்றுகள் நடைபெறுகின்றன. அரையிறுதி ஆட்டங்கள் இரண்டு லெக்குகளை கொண்டது. ஒட்டு மொத்த கோல் அடிப்படையில் வெற்றி பெறும் இரு அணிகள்,  இறுதி ஆட்டத்துக்கு செல்லும். இறுதி ஆட்டம்,  டிசம்பர் 20ஆம் தேதி நடைபெறுகிறது. போட்டிகள் அனைத்தும் இரவு 7 மணிக்கு நடைபெறுகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு