Published:Updated:

தப்பிய ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள்; போலீசாரிடம் சிக்கிய மனித வெடிகுண்டு!

லாகூர்: லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்திற்குள் பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் மோதிய போட்டியின் போது,  வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு நுழைய முயன்றவர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். எனினும் அவர் வெடிகுண்டுகளை வெடிக்க செய்ததால் 2 பேர் உயிரிழந்தனர்.

தப்பிய ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள்; போலீசாரிடம் சிக்கிய மனித வெடிகுண்டு!

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி தற்போது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. நேற்று லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் பாகிஸ்தான்- ஜிம்பாப்வே அணிகள் மோதிய 2வது கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த பகலிரவு போட்டியை காண 20 ஆயிரம் ரசிகர்கள் திரண்டிருந்தனர். நேற்று இரவு 9 மணியளவில் போட்டி நடந்து கொண்டிருக்கும் போது, கல்மா சவுக் பகுதியில் இருந்து மைதானத்திற்குள் நுழைய முயன்ற ஒருவரை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர்.

தப்பிய ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள்; போலீசாரிடம் சிக்கிய மனித வெடிகுண்டு!

அப்போது அந்த நபர் தனது உடலில் கட்டியிருந்த  வெடிகுண்டுகளை வெடிக்க செய்ததில், அந்த நபரும் சோதனையிட்ட போலீஸ் அதிகாரியும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக முன்னுக்கு பின் முரணாண தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. தொடக்கத்தில் கடாஃபி ஸ்டேடியம் அருகே உள்ள ட்ரான்ஸ்பார்ம் வெடித்து சிதறியதாக கூறப்பட்டது.

தற்போது பாகிஸ்தான் செய்தித்துறை அமைச்சர் பர்வேஷ் ரஷீத், கடாஃபி மைதானம் அருகே மனித வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றதையும், இருவர் உயிரிழந்ததையும் உறுதி செய்துள்ளார். ஆனால் இந்த மனித வெடிகுண்டு தாக்குதலால் கிரிக்கெட் போட்டி நிறுத்தப்படவில்லை. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

 மனிதவெடிகுண்டு தாக்குதலையடுத்து ஜிம்பாப்வே அணி வீரர்களின் கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை அணி வீரர்கள் மீது பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்குபின் 6 ஆண்டுகாலமாக அந்த நாட்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெரும் முயற்சிக்கு பின், ஜிம்பாப்வே அணியை பாகிஸ்தானுக்கு வரவழைத்தது. இந்த தொடரை சீரழிக்கும் நோக்கத்தில் இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது.
 
அடுத்த கட்டுரைக்கு