Published:Updated:

கடைசி வாய்ப்புக்காக மன்றாடிய சந்தர்பால்... நிராகரித்த பயிற்சியாளர்!

கடைசி வாய்ப்புக்காக மன்றாடிய சந்தர்பால்... நிராகரித்த பயிற்சியாளர்!
கடைசி வாய்ப்புக்காக மன்றாடிய சந்தர்பால்... நிராகரித்த பயிற்சியாளர்!

கடைசி வாய்ப்புக்காக மன்றாடிய சந்தர்பால்... நிராகரித்த பயிற்சியாளர்!

ந்தர்பால் கடைசியாக ஒரே ஒரு தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாட வாய்ப்பளிக்குமாறு மன்றாடியதாகவும்,  ஆனால் பயிற்சியாளர் சிம்மன்ஸ் அதனை நிராகரித்து விட்டதாகவும் உள்ளூர் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடைசி வாய்ப்புக்காக மன்றாடிய சந்தர்பால்... நிராகரித்த பயிற்சியாளர்!

இது தொடர்பாக இருவருக்குமிடையே வாட்ஸ்அப்பில் நடந்த உரையாடலை அந்த பத்திரிகை அப்படியே வெளியிட்டுள்ளது. சந்தர்பால் தனது வாட்அப் உரையாடலில்,"ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருடன் எனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டுமென்பது எனது நியாயமான ஆசை என்றே கருதுகிறேன். தாய்நாட்டு ரசிகர்களிடம் இருந்து எனக்கு பிரியா விடை பெறும் கடைசி வாய்ப்பாகவும் இது எனக்கு இருக்கும்.

அந்த தருணத்தில் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மேற்கிந்திய கிரிக்கெட்டுக்கு நான் அளித்த பங்களிப்புக்காக மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் எனக்கு பிரிவுபச்சார விழா நடத்தவும் வாய்ப்புள்ளது.ஓய்வு முடிவுக்கு என்னை கட்டாயப்படுத்தக் கூடாது.சொந்த மண்ணில் சொந்த ரசிகர்கள் முன்னிலையில் கடைசிப் போட்டியில் விளையாட விரும்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.

ஆனால் பயிற்சியாளர் சிம்மன்ஸ் தனது உரையாடலில், “கடந்த 21 ஆண்டுகளாக மேற்கிந்திய கிரிக்கெட்டுக்காக உங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.ஆனால் அதிக காலம் விளையாடியது மட்டுமே அணித் தேர்வுக்கான அளவுகோலாக இருக்க முடியாது. அப்படிப் பார்த்தால் நீங்கள் 50 வயது வரை கூட விளையாடிக் கொண்டிருக்கலாம். நாங்கள் உங்களை ஓய்வு நோக்கி தள்ளவில்லை. சந்தர்பால் ஓய்வு பெறுகிறார் என்பது சந்தர்பால் அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்பதை விட மதிப்பு மிக்கதுதானே?” என்று பதிலளித்ததாக அந்த உள்ளூர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

 

அடுத்த கட்டுரைக்கு