Published:Updated:

தந்தை டிராவிட்டின் ஸ்டைலை ஃபாலோ பண்ணும் அன்வாய்!

Vikatan Correspondent
தந்தை டிராவிட்டின் ஸ்டைலை ஃபாலோ பண்ணும் அன்வாய்!
தந்தை டிராவிட்டின் ஸ்டைலை ஃபாலோ பண்ணும் அன்வாய்!

புலிக்குப் பிறந்தது எலியாகவோ, பூனையாகவோ ஆகாதல்லவா? அதேதான் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் விஷயத்திலும்!

டிராவிட்டின் மகன் அன்வாய்க்கு, தனது தந்தையைப் போலவே இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்பதுதான் பேராசை. மகனின் ஆசைக்கு முட்டுக்கட்டை போடாமல், இப்போதிருந்தே கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடுத்தி வருகிறார், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கோச் டிராவிட்.

தந்தை டிராவிட்டின் ஸ்டைலை ஃபாலோ பண்ணும் அன்வாய்!

தற்போது கோடை விடுமுறை என்பதால், தினந்தோறும் அன்வாய்க்குப் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று மும்பையில் உள்ள பிராபோர்ன் ஸ்டேடியத்தில், ட்ரையல் பார்த்துக் கொண்டிருந்தார் அன்வாய். இதில் பேட்ஸ்மேன் அடித்த பந்தை அன்வாய் டைவ் அடித்துப் பிடித்தபோது எடுக்கப்பட்ட படம், இப்போது நெட்டில் வைரலாகப் பரவி ‘லைக்ஸ்’ அள்ளிக் கொண்டிருக்கிறது.

‘பெருஞ்சுவர்’ என்று பெயரெடுத்த டிராவிட்டின் பேட்டிங் ஸ்டைல் உலகமறிந்ததே! அதேபோல், ஃபீல்டிங்கில் எப்போதுமே ஸ்லிப் ஏரியாவைத்தான் கவர் செய்வார் டிராவிட். பேட்டிங்கிலும் ஃபீல்டிங்கிலும் டிராவிட்டைத் தாண்டி பந்து போவது, எப்போதாவதுதான் நடக்கும்!

இங்கே அன்வாய் டைவ் அடிக்கும் ஸ்டைல், அப்படியே அவரின் தந்தை டிராவிட்டை நினைவூட்டுகிறது என்று பத்திரிகைகளிலும் செய்தி பரவ, ‘மகன் தந்தைக்காற்றிய பெருமை’ என்பதுபோல் மகன் டைவ் அடிக்கும் படத்தைப் பார்த்துப் பார்த்துப் பூரிக்கிறாராம் அப்பா டிராவிட்.

- தமிழ்