Published:Updated:

டர்பன் டெஸ்ட் நாள்1: ஸ்டெயினிடம் இந்தியா திணறல்!

Vikatan Correspondent

டர்பன், டிச.26,2010

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை, இந்திய வீரர்களை தனது அபார பந்துவீச்சால் ஸ்டெயின் கட்டுப்படுத்தினார். ##~~##

டர்பனில் நடைபெற்று வரும் இப்போட்டியில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்திருந்தது. போதிய வெளிச்சமின்மை காரணமாக, 57 ஓவர்களே இன்று வீசப்பட்டன.

லஷ்மண் 38 ரன்களையும், சேவாக் மற்றும் டிராவிட் ஆகியோர் தலா 25 ரன்களையும், விஜய் மற்றும் புஜாரா ஆகியோர் தலா 19 ரன்களையும், சச்சின் 13 ரன்களையும் எடுத்தனர்.

தோனி 20 ரன்களும், ஹர்பஜன் 15 ரன்களும் எடுத்த நிலையில் களத்தில் இருந்தனர்.

தென் ஆப்பிரிக்க தரப்பில், ஸ்டெயின் அபாரமாக பந்துவீசி 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். சோத்சோபே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் டெஸ்ட்டில் தோல்வியுற்றதால், இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற ஆக வேண்டும் என்றக் கட்டாயத்தில் இருக்கிறது, இந்தியா.