Published:Updated:

பி.சி.சி.ஐ பணத்தில் 'ஜேம்ஸ்பாண்ட்' வேலை பார்த்தாரா ஸ்ரீனிவாசன்?

Vikatan Correspondent
பி.சி.சி.ஐ பணத்தில்  'ஜேம்ஸ்பாண்ட்' வேலை பார்த்தாரா ஸ்ரீனிவாசன்?
பி.சி.சி.ஐ பணத்தில் 'ஜேம்ஸ்பாண்ட்' வேலை பார்த்தாரா ஸ்ரீனிவாசன்?

பி.சி.சி.ஐ பணத்தில் சக நிர்வாகிகளை வேவு பர்த்ததாக முன்னாள் பி.சி.சி.ஐ தலைவர் ஸ்ரீனிவாசன் மீது மற்றொரு சர்ச்சை எழுந்துள்ளது.

பி.சி.சி.ஐ பணத்தில்  'ஜேம்ஸ்பாண்ட்' வேலை பார்த்தாரா ஸ்ரீனிவாசன்?

பி.சி.சி.ஐ-யில் நிர்வாகிகளாக உள்ள பலரையும் வேவு பார்ப்பதற்காக லண்டனை சேர்ந்த துப்பறியும் நிறுவனத்தை ஸ்ரீனிவாசன் கேட்டுக் கொண்டதாகவும், அதன்படி அந்த நிறுவனம் சக நிர்வாகிகளின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் நிர்வாகிகள் அனுப்பும் இமெயில்களை சேகரிக்கும் பணியிலும் அந்த துப்பறியும் நிறுவனம் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

இதற்காக பி.சி.சி.ஐ பணத்தில் இருந்து சுமார் ரூ. 14 கோடி வரை ஸ்ரீனிவாசன் செலவழித்தாகவும் சர்ச்சை வெடித்துள்ளது. கிரிக்கெட் வாரிய பணத்தை தன்னிச்சையாக செலவு செய்ய ஸ்ரீனிவாசனுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்றும் நேற்று நடைபெற்ற பி.சி.சி.ஐ செயற்குழுக் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டதாகவும் தெரிகிறது.

இது தொடர்பான உண்மை நிலையை விசாரிக்க பி.சி.சி.ஐ செயலாளர் அனுராக் தாக்கூர் தலைமையில், குழு அமைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மறுப்பு

இதனிடையே இந்த குற்றச்சாட்டை ஸ்ரீனிவாசனுக்கு  நெருக்கமான வட்டாரங்கள் மறுத்துள்ளன. இது அவர் மீதான நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சி என்றும் அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.