Published:Updated:

அர்ஜுனா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை!

Vikatan Correspondent
அர்ஜுனா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை!
அர்ஜுனா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை!

ந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு ரோகித் சர்மா பெயரை பி.சி.சி.ஐ பரிந்துரைத்துள்ளது.

அர்ஜுனா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை!

இது குறித்து பி.சி.சி.ஐ. செயலாளர் அனுராக் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று நடந்த பி.சி.சி.ஐ செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஒருநாள் போட்டி வரலாற்றில் கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில்  இலங்கை அணிக்கு எதிராக 264 ரன்களை குவித்து பிரமிக்க வைத்தவர் ரோகித் சர்மா.

அதோடு கடந்த உலகக் கோப்பை போட்டியில் மெல்பர்ன் மைதானத்தில் வங்க தேச அணிக்கு எதிரான ரோகித் சர்மா 126 பந்துகளில் 137 ரன்கள் அடித்தார். மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலிய வீரர்களைத் தவிர இரண்டு முறை சதமடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் ரோகித் பெற்றார்.

இதற்கு முன் இங்கிலாந்து வீரர் டேவிட் கோவர் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகியோர் மட்டுமே புகழ்பெற்ற இந்த மைதானத்தில் இரண்டு முறை சதமடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.