Published:Updated:

ஆஷஸ் 4-ம் டெஸ்ட்: இங்கிலாந்து முழு ஆதிக்கம்!

Vikatan Correspondent

மெல்போர்ன், டிச.26,2010

ஆஷஸ் நான்காவது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில், இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தியது. ##~~##

ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸ்சில் 42.5 ஓவர்களிலெயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 98 ரன்களில் சுருண்டது.

அந்த அணியின் மைக்கேல் கிளார்க் 20 ரன்களையும், ஹூயூக்ஸ் 16 ரன்களையும் எடுத்தனர். சிடில் 11 ரன்களையும், பான்டிங் மற்றும் ஹாரிஸ் ஆகியோர் தலா 10 ரன்களையும் எடுத்தனர். ஏனையோர் ஒற்றை இலக்க ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் மற்றும் ட்ரெம்லெட் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும்,  பிரெஸ்னன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர், தனது முதலாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி ஆட்ட நேர முடிவில், 47 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 157 ரன்கள் எடுத்திருந்தது.

ஸ்ட்ராஸ் 64 ரன்களுடனும், குக் 80 ரன்களுடனும் களத்தில் இருந்ததனர்.

இந்தத் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருப்பதால், இந்தப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது என்பது கவனத்துக்குரியது.